இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

பேரறிவாளன் கதறல்!!!,,

சென்னை: நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் போதே என் குரல் வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் பேரறிவாளன் தெரிவித்துள்ளார்.
 Perarivalan

இது குறித்து அவர் தனது குடும்பத்திற்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,

பேரன்புமிக்க அம்மா, அப்பா, சகோதர, சகோதரிகளே,

வணக்கம். நான், அ.ஞா.பேரறிவாளன், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 19 வயதில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு அதன் விளைவாய் தூக்கு தண்டனை பெற்றவனாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் இருந்து வருபவன். எள் முனையளவும் தொடர்பே இல்லாத வழக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும், கேட்க நாதியற்றவன் என்பதாலும் அநீதியான தீர்ப்பை சுமந்து நிற்பவன்.

தந்தை பெரியாரின் கொள்கையால் நிரம்பிய குடும்ப வழி வந்தவன் என்பதால் மனிதநேயத்தின் அடிப்படையிலும், தொப்புள் கொடி உறவு என்பதால், இன உணர்வின் அடிப்படையிலும் சிங்கள இனவாதத்திற்கு எதிரான ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து அதற்காக தமிழக மண்ணில் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்தவன் என்ற காரணத்தால் என் மீது தவறான குற்றச்சாட்டு புனையப்பட்டது என்பதை தங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

19 வயது இளைஞனாய் கைது செய்யப்பட்டு, வாழ்வின் வசந்த காலங்களையெல்லாம் சிறையில் செய்யாத குற்றத்திற்காக தொலைத்து, இன்று 40 வயதுடன் பக்குவப்பட்ட குடிமகனாய் உங்கள் முன் இக்கடிதத்தின் மூலம் பேசுகிறேன்.

1. திரு. ராஜீவ் அவர்களின் கொலையை நியாயப்படுத்துவதல்ல இக்கடிதத்தின் நோக்கம். மாறாக இக்குற்றத்திற்கு எவ்வித தொடர்புமில்லாத நானும், என்னைப் போன்றவர்களும் மரண தண்டனைக்கு உரியவர்கள் அல்லர் என்று எடுத்துரைப்பது மட்டுமே.

2. திரு. ராஜீவ் கொலை விஷயமாக விசாரிக்க வேண்டும் என்று சொல்லி 11.06.1991 அன்று விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நான் இன்று வரை நீதி மறுக்கப்பட்டு தூக்கு மரத்தின் நிழலிலேயே வாழ்ந்து வருகிறேன்.

3. அக்கொலைக்கு பயன்பட்ட ‘பெல்ட் பாம்’ செய்வதற்கு நான் உதவினேன் என்பதே என் தண்டனைக்கு வழி வகுத்தக் குற்றச்சாட்டு. இதற்கு ஏதுவாக ஊடகங்களில் பொய் செய்தி பரப்பப்பட்டது. ‘இந்தியா டுடே’ நாளிதழும் நான் எப்படி வெடிகுண்டு செய்தேன் என்று பொய்யாக ஒரு செய்முறை விளக்கம் வெளியிட்டிருந்தார்கள். ஆனால், “சி.பி.ஐ.யால் இறுதி வரை கண்டுப்பிடிக்க முடியாத கேள்விகளுள் ஒன்று, அந்த ‘பெல்ட் பாம்’ஐ செய்தவர் யார் என்பதே” என்று.

விடை தெரியா கேள்விக்கு விடையாக நான் பலியிடப் படவேண்டுமா?

4. அந்த ‘பெல்ட் பாமிற்கு’ 9வி பேட்டரி வாங்கித் தந்தேன் என்பதின் மூலமே நான் அந்த ‘பெல்ட் பாம்’ஐ செய்தேன் என வழக்குரைத்தனர் அரசு தரப்பு வழக்கறிஞர்கள். அதற்கு வசதியாக என்னுடைய மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியலில் பட்டய படிப்பும் இவர்களின் கதைக்கு கருவானது. ஆனால் வழக்கின் எந்தவொரு இடத்திலும் நான் வாங்கித் தந்த 9வி பேட்டரிதான் பெல்ட் பாம் வெடிக்கப் பயன்பட்டது என்பது நிரூபிக்கப்படவில்லை.

5. உண்மை என்னவெனில் நான் 9வி பேட்டரியை வாங்கவுமில்லை, அதனை யாருக்கும் தரவுமில்லை. ஆனால் நான் 9வி பேட்டரி வாங்கினேன் என்பதற்கு வழக்கிலுள்ள ஒரே ஆதாரம், ஒரு பெட்டிக் கடைக்காரரின் சாட்சி தான். இந்த சாட்சியை ஏற்க முடியாது என்று தடா நீதிமன்றத்தில் கூறிய நீதிபதி, பிறகு என்ன காரணத்தினாலோ இந்த சாட்சியை ஏற்றுக் கொண்டுவிட்டார். நான் வாங்காத பேட்டரியை வாங்கினேன் என்று ஒருவர் மூலம் சொல்ல வைப்பது நம் காவல்துறைக்கு எத்தனை சுலபம் என்று சற்றே சிந்தியுங்கள்.

6. தடா சட்டத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டதே தவறு என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. காரணம் இந்தக் கொலைக் குற்றவாளிகளுக்கு கொலை செய்யப்பட்டவர்களைத் தவிர யாதொருவரையும் அச்சுறுத்தவோ, கொல்வதோ நோக்கமாக இருந்திருக்கவில்லை என்று எடுத்துரைத்தது. அப்படி இருக்கும் வேளையில், எங்களை தடா சட்டத்தின் கீழ் கைது செய்து, உரிமைகள் மறுக்கப்பட்டு, தடா சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு, பெறப்பட்ட வாக்கு மூலம் மட்டும் எப்படி செல்லுபடியாகும்?

மேலும் நம் நாட்டில் வாக்கு மூலங்கள் எப்படிப் பெறப்படுகின்றன என்பதும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். கடுமையான சித்திரவதை, மிரட்டல், அடி உதைக்கு பயந்துதான் பல வாக்குமூலங்கள் ரத்தத்தால் கையெழுத்தாகின்றன. பொதுவாக அப்படிப் பெறப்படும் வாக்கு மூலங்களை மட்டுமே வைத்து நீதிமன்றங்கள் தீர்ப்பினை தருவது கிடையாது. ஆனால் என் வழக்கில் மட்டும் நீதிமன்றம் அவ்வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, வேறு எந்த ஆதாரமும் இல்லாமல் எனக்குத் தூக்குத் தண்டனை வழங்கியுள்ளது.

7. ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்த திரு. தியாகராஜன் என்ற அதிகாரி கேரள மாநிலத்தில் 1993 இல் நடைபெற்ற அருட்சகோதரி அபயா கொலை வழக்கை ‘தற்கொலை’ என முடிக்க அழுத்தம் கொடுத்தவர் என்பதும், அவரது முறைகேட்டை எதிர்த்ததால், அவருக்கு கீழ் பணிபுரிந்த துணை காவல் கண்காணிப்பாளர் திரு. தாமஸ் வர்கீஸ் என்பவர் தனது பதவியை துறந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பிறகு இந்த வழக்கு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை என்று திரும்பியது. எர்ணாகுளம் தலைமை நீதிமன்ற நடுவர் 23.06.2000 அன்று அளித்த தீர்ப்பில் கடுமையான கண்டனங்களை வாங்கியவர் இந்த தியாகராஜன். இவர் என்னிடம் வாங்கிய வாக்குமூலங்கள் ஏன் உண்மையாக இருக்க வேண்டும்? யாருக்காகவோ வழக்கை எப்படியும் வளைப்பவர்கள்தானே இவர்கள்....

8. தடா சட்டத்தில், சிறப்பு தனி நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டதால், பெரும் பான்மையான உரிமைகள் எனக்கு மறுக்கப்பட்டன. அதுவே என் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூற முடியாமல் செய்துவிட்டது. பொதுவாக ஒரு மாவட்ட நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பிற்கு, உயர்நீதிமன்றம், பிறகு உச்சநீதிமன்றம் என்று இருமுறை மேல் முறையீடு செய்யும் வாய்ப்புள்ளது.

இந்த செயலபாடு ஒரு இடத்தில் இல்லாவிட்டாலும் மறு இடத்தில் நீதி சரியாக கிடைக்க உதவியது. ஆனால் எங்கள் விஷயத்தில் தடா கொடுங்கோல் வழக்கு என்பதால், உயர் நீதிமன்றம் செல்லும் வாய்ப்பு மறுக்கப்பட்டு, இரண்டில் ஒரு மன்றத்தின் கதவு அடைக்கப்பட்டுப்போனது. இப்பொழுது தடா சட்டம் தவறு என்று அந்த சட்டமே நம் நாட்டில் வாபஸ் பெறப்பட்டாலும், அதனால் பாதிக்கப்பட்ட என் போன்றவர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்? எப்பொழுது கிடைக்கும்?

9. தடா நீதிமன்றத்தின் கீழ் விசாரிக்கப்படுபவர்கள் 20 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என தடா சட்ட வரம்பு சொல்கிறது.

10. அவர் அதற்கு முன்னால் குற்றம் ஏதும் புரிந்தவரா என்பதை கவனிக்க வேண்டும்.

11. குற்றப் பின்னணி உள்ள குடும்பத்தைச் சார்ந்தவரா என்பதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்கிறது தடா சட்டம்.

12. எனக்கு மட்டும் இந்த எந்த வரைமுறைகளையும் கடைபிடிக்காமல் தடாவின் கீழ் கைது செய்து விசாரித்து, தண்டனையும் அறிவித்தார்கள்.

13. சிறப்பு நீதிமன்றத்தில் 26 பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் அதில் 22 பேர் தூக்குத் தண்டனையை ரத்து செய்கிறதென்றால், இவ்வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் எத்தன்மையுடன் ஒரு தலைப்பட்சமாக, முன் முடிவுகளுடன் விசாரிக்கப்பட்டதென்பதை புரிந்து கெள்ள முடியும்.

சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்று இருந்தாலும், இந்த வழக்கைப் பொறுத்தவரை கொல்லப்பட்டவர் ராஜீவ் என்பதாலும், அவருக்கு இருந்த செல்வாக்கு மற்றும் ஊடக அனுகூலங்களாலும், ஒரு தலைபட்சமாகவே பார்க்கப்பட்டது. இன்னொரு வாய்ப்பு கிடைக்கப் பெற்று, நடுநிலையுடன் விசாரிக்கப்பட்டால் எங்களது தூக்குக் கயிறும் கண்டிப்பாக அறுபடும் என்று என்னால் உறுதியாக கூற முடியும்.

அந்த வசதி இங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளில் உள்ளது. ஆனால் இனி வழக்கை விசாரிக்கும் வழியில்லை என்கிறது இந்திய குற்றவியல் சட்டம். ஆகையால் கருணை மனுவின் மீதான முடிவே இறுதி முடிவு என்று விடப்பட்ட பரிதாபத்துக்குரியவர்கள் ஆகிப் போனோம் நாங்கள். நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் பொழுதே என் குரல் வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ?

14. திருமதி சோனியா காந்தி, இவ்வழக்கில் தூக்குத் தண்டனைப் பெற்றவர்களுக்கு அத்தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் எனக்கோ என் குழந்தைகளுக்கோ (ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி) சற்றும் விருப்பமில்லை என ஏற்கனவே கூறியுள்ளார்.

15. ஆயினும் எங்களை 20 ஆண்டுகளாக இப்படி சிறையில் அடைத்து வைத்திருக்கும் மர்மம் எங்களுக்கு விளங்கவில்லை. நிரபராதிகளான எங்களை இப்படி தூக்குக் கொட்டடியிலேயே வைத்திருக்கும் காரணம் புரியவில்லை.

16. 1980களின் இறுதியில் வாழ்ந்த எல்லா இளைஞர்களைப் போலவே நானும் ஈழ விடுதலையிலும், விடுதலைப் போராளிகளின் மீதும் பற்றுக் கொண்டிருந்தேன். அன்று கல்லூரிகளிலும், பணி இடங்களிலும் எல்லோரும் தான் விடுதலைப் போராட்டத்திற்காக உதவி வந்தார்கள்.

ஒரு நாள் ஊதியத்தையும் கொடுத்தார்கள். பள்ளிகளில் நன்கொடை வசூலித்தார்கள். ஏன் நம் மத்திய, மாநில அரசுகள் கூடத்தான் அவர்களுக்கு உதவிகள் புரிந்தன? ஒரு துர்ச் சம்பவம் நிகழும்பொழுது நான் மட்டும் எப்படி எதிரி ஆகிப் போனேன்?? ஏன் தனிமைப்படுத்தப்பட்டேன்?? உங்களில் ஒருவன் தானே நானும்??

தூக்குத் தண்டனை என்பது சட்டத்தின் பெயரால் செய்யப்படும் திட்டமிட்ட படுகொலை என்கிறார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர்.

செய்த குற்றத்திற்கு வழங்கப்படும் தூக்கு தண்டனையையே திட்டமிட்டப் படுகொலையெனில், செய்யாத குற்றத்திற்கு வழங்கப்படும் தூக்குத் தண்டனையை என்னவென்று சொல்வது?

- முடிவுறா விசாரணையில், முடிவினை நோக்கித் தள்ளப்பட்டுள்ள அப்பாவி

இவ்வாறு அவர் அந்த கடித்தத்தில் தன் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.


வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

தேசியக் கொடி பிறந்த வரலாறு


தேசியக் கொடி பிறந்த வரலாறு!
History of Indian National Flag
ஒவ்வொரு நாட்டுக்கும் அடையாளமாக விளங்குவது அந்த நாட்டின் தேசியக் கொடியாகும். அனேகமாக ஒவ்வொரு நாடுமே, அது பிறப்பதற்கு முன்பே தேசியக் கொடியை உருவாக்கியிருக்கும். அதேபோலத்தான் இந்தியாவும் தனது தேசியக் கொடியை சுதந்திரமடைவதற்கு முன்பே உருவாக்கியது. பல்வேறு உருவங்களில் வலம் வந்த நமது தேசியக் கொடி 1947ம் ஆண்டு ஜூலை மாதம் தற்போதைய வடிவத்தை அடைந்தது. சுதந்திரம் கிடைக்க ஒரு மாதத்திற்கு முன்புதான் நமது தேசியக் கொடி தற்போதைய வடிவத்தை எட்டியது.

தேசியக் கொடிதான் ஒவ்வொரு நாட்டுக் குடிமகனுக்கும் உயிர் மூச்சாகும். கொடிக்காக உயிர் துறந்த குமரன்கள் பலரைக் கண்ட நாடு நமது இந்தியா.

தேசியக் கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கய்யா:

இந்தியாவின் தேசியக் கொடியை உருவாக்கி வடிவமைத்தவர் பிங்கலி வெங்கய்யா. ஆந்திராவைச் சேர்ந்தவர். தற்போதைய தேசியக் கொடிக்கு 1947ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி அப்போது உருவாக்கப்பட்டிருந்த நியமனச் சபையில் அங்கீகாரம் தரப்பட்டது. இதுதான் இந்தியாவின் தேசியக் கொடி என்று முடிவெடுக்கப்பட்டது அந்த நாளில்தான்.

மூன்று வண்ணங்களைக் கொண்டதாக கொடி இருந்ததால் இதற்கு மூவர்ணக் கொடி என்றும் பெயர் வந்தது. மேலே காவி நிறமும், நடுவில் வெண்மையும், கீழே பச்சை நிறமும் கொண்டதே இந்தியாவின் தேசியக் கொடி. நடுவில் அசோக சக்கரம் இடம் பெற்றிருக்கிறது. இந்த அசோக சக்கரம் கடல் நீல நிறத்தில் இருக்கும்.

முதல் கொடி பிறந்தது 1906ல்:

முதல் முதலில் இந்தியாவின் தேசியக் கொடி ஏற்றப்பட்டது 1906ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம்தேதி. கல்கத்தாவின் கிரீன் பார்க்கில் அந்தக் கொடியை ஏற்றினர். அந்தக் கொடி சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறத்திலான படுக்கை வச பட்டைகளுடன் கூடியதாக இருந்தது. இதுதான் முதல் கொடியாகும்.

அடுத்து 1907ம் ஆண்டு பாரீஸில் மேடம் காமா 2வது தேசியக் கொடியை ஏற்றினார். முதல் கொடியைப் போலவே கிட்டத்தட்ட இது இருந்தது. இருப்பினும் தாமரையும், சப்தரிஷிகளைக் குறிக்கும் வகையில் ஏழு நட்சத்திரங்களும் கொடியில் இடம் பெற்றிருந்தன. இந்தக் கொடி பெர்லினில் நடந்த சோசலிச மாநாட்டின்போது காட்சிக்கு வைக்கப்பட்டது.

அடுத்து 1917ம் ஆண்டு ஹோம்ரூல் இயக்கம் நடந்தபோது, டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையாரும், லோகமான்ய பாலகங்காதர திலகரும் இணைந்து ஒரு கொடியை ஏற்றினர். இதில் ஐந்து சிவப்பு மற்றும் நான்கு பச்சை நிற படுக்கை வச கோடுகளும் இடம் பெற்றிருந்தன. மேலும் ஏழு நட்சத்திரங்களும் இடம் பெற்றிருந்தன. கொடியின் இடதுபுற மூலையில் இங்கிலாந்தின் யூனியன் ஜாக்கும், வலது புறம் வெள்ளை நிற பிறையும், நட்சத்திரமும் இடம் பெற்றிருந்தன.

1921ல் இரு வண்ணக் கொடி:

1921ம் ஆண்டு பெஸ்வாடா (இப்போதைய விஜயவாடா) என்ற இடத்தில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தின்போது ஆந்திர இளைஞர் ஒருவர் ஒரு கொடியை உருவாக்கி அதை காந்தியிடம் கொடுத்தார். அதில் இந்துக்களையும், முஸ்லீம்களையும் குறிக்கும் வகையில் கொடியில் சிவப்பு மற்றும் பச்சை நிறம் இடம் பெற்றிருந்தது. அதைப் பார்த்த காந்தி, கொடியில் வெள்ளை நிறத்தை சேர்க்க ஆலோசனை கூறினார். மேலும், சுழலும் சக்கரத்தை இணைக்குமாறும் அவர் ஆலோசனை கூறினார்.

31ல் பிறந்தது மூவண்ணக் கொடி:

1931ம் ஆண்டு நமது தேசியக் கொடியின் வரலாற்றில் முக்கியமான ஆண்டாகும். அந்த ஆண்டில்தான் மூவண்ணக் கொடியை நமது தேசியக் கொடியாக ஏற்கலாம் என்ற அங்கீகாரம் கொடுக்கப்பட்ட ஆண்டாகும். இதுதொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றினர். அந்தக் கொடியே தற்போதைய கொடியின் முன்னோடியாகும். காவி, வெண்மை மற்றும் பச்சை நிறத்துடன் கூடிய அந்தக் கொடியில் காந்தியின் ஆலோசனையை ஏற்று சுழலும் சக்கரமும் இணைக்கப்பட்டிருந்தது (அசோக சக்கரம் இல்லை).

1947ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி நடந்த நியமனச் சபையின் கூட்டத்தில் தற்போதைய சுதந்திரக் கொடி அறிமுகப்படுத்தப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. சுழலும் சக்கரத்திற்குப் பதில் அசோக சக்கரம் இணைக்கப்பட்டு கொடி தற்போதைய வடிவத்தை அடைந்தது.

பலம்-அமைதி-வளர்ச்சி:

தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள மூவண்ணத்திற்கும் ஒரு தத்துவம் உண்டு. காவி நிறம் பலத்தையும், தைரியத்தையும் குறிப்பதாக அமைந்துள்ளது. நடுவில் உள்ள வெண்மை நிறம், உண்மை மற்றும் அமைதியை காட்டுகிறது. பச்சை நிறம், வளர்ச்சி, பசுமை மற்றும் விவசாய செழிப்பைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

நடுவில் இடம் பெற்றுள்ள அசோக சக்கரம், வாழ்க்கை சுழற்சியை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

எங்கும் ஏற்றி மகிழலாம்:

2002ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி வரை தேசியக் கொடியை இஷ்டப்பட்ட இடத்தில் ஏற்ற முடியாது என்று கட்டுப்பாடு தடை இருந்தது. ஆனால் அந்த ஆண்டு குடியரசு தினம் முதல் பொதுமக்கள் எங்கு வேண்டுமானாலும் தேசியக் கொடியை ஏற்றி மகிழலாம் என மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து அந்த குடியரசு தினத்தன்று மக்கள் தங்களது வீடுகள், அலுவலகங்கள், பொது இடங்கள் உள்ளிட்ட இடங்களில் கொடியேற்றி மகிழ்ந்தனர்.

தேசியக் கொடியை ஏற்றுவதிலும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. தேசியக் கொடிக்கு எந்த வகையிலும் அவதூறு, அவமதிப்பு ஏற்படாத வகையில் கையாள வேண்டும், கொடியேற்ற வேண்டும்.

மத நோக்கத்திற்கான காரியங்களில் தேசியக் கொடியை பயன்படுத்தக் கூடாது. சட்டை உள்ளிட்ட துணிகளில் தேசியக் கொடியை அச்சிடக் கூடாது. சூரிய உதயத்தின்போது கொடியை ஏற்றி, சூரிய அஸ்தமனத்தின்போது இறக்கி விட வேண்டும்.

கொடி கிழிந்த நிலையிலோ அலலது கசங்கிய நிலையிலோ அல்லது நிறம் மங்கிய நிலையிலோ ஏற்றப்படக் கூடாது. தரையைத் தொடும் வகையிலோ அல்லது தண்ணீரில் மிதக்கும் நிலையிலோ கொடியை பறக்க விடக் கூடாது.

தேசியக் கொடி பறக்கும் போது அதற்கு மேல் வேறு எந்தக் கொடி அல்லது துணி பறக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொடி மீது மாலை உள்ளிட்ட வேறு எந்தப் பொருளும் இடம் பெறக் கூடாது.

இந்திய மக்களின் இறையாண்மை, சுதந்திரம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் தேசியச் சின்னமே நமது தேசியக் கொடி. நமது தேசியப் பெருமையின் அடையாளம் தேசியக் கொடி. கம்பீரமாக பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக் கொடிக்கு வீர வணக்கம் செலுத்தி நாம் பெற்ற சுதந்திரத்தை கெளரவிப்போம்.

செவ்வாய், 26 ஜூலை, 2011

ராஜபக்சவை தண்டிக்க கோரி கையெழுத்து இயக்கம்! நடிகர் விஜய் கையெழுத்துப் போட மறுப்பு!




இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்ச கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் கையொப்ப இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சி 12.07.2011 அன்று சென்னையில் தொடங்கியது. 
இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்தார். 


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 


25.07.2011 அன்று திரைத்துறையை சார்ந்த சத்தியராஜ், மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, ரோஜா, அறிவுமதி உள்ளிட்ட பலரிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர். 
இதேபோல் நடிகர் விஜய் ஈழத் தமிழர்களைப் பற்றி பேசி வருவதால், அவரிடம் கையெழுத்து வாங்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் முடிவு செய்தனர். 
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு இடத்தில் இயக்குநர் சங்கர் இயக்கிவரும் நண்பன் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் இருந்துள்ளார். 


படப்பிடிப்பு முடிந்து ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த விஜய்யிடம், கையெழுத்து போடும்படி கேட்டனர். இதற்கு நடிகர் விஜய் கையெழுத்து போட மறுத்துவிட்டார். 


இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு கூறியதாவது, 
நடிகர் விஜய் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லி கையெழுத்து போட மறுத்துவிட்டார். 


இதையடுத்து விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரை தொடர்பு கொண்டபோது அவர் கூறுகையில், 
உங்களைப் போலவே நாங்களும் ஒரு அமைப்பு வைத்திருக்கிறோம். உங்களுக்கு கையெழுத்து போட வேண்டிய அவசியம் இல்லை. படப்பிடிப்புக்கு தொந்தரவு கொடுக்காமல் அந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள் என்றார். 


ராஜபக்ச கொலைக் குற்றவாளி என்பதற்காகத்தான் இந்த கையெழுத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம். வேறு எந்த காரணத்துக்காகவும் இல்லை என்று நாங்கள் எடுத்துக் கூறினோம். இருப்பினும் அவர்கள் கையெழுத்து போட மறுத்துவிட்டனர் என்றார். 
மேலும் பேசிய வன்னியரசு, ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பதைப் போல விஜய் மக்களை ஏமாற்றி வருகிறார் என்று கூறினார். 


விஜய் கையெழுத்துப் போட மறுத்திருப்பது உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


 











 
நன்றி Loyal tip  blog

இவனையெல்லம் ஒரு மனுசன்னு ம்திச்சு கேட்டங்களே இவங்கள என்னான்னு சொல்றது
மக்கள் இவர்களை அடையாலம் கண்டு புறக்கனிக்க வேண்டும்

வியாழன், 21 ஜூலை, 2011

ஆட்டுக்கல்

அன்பு நண்பர்களே வணக்கம்!
                             தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசு சார்பில் ஏழைகளுக்கு (குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு)ஈரமாவு அரவைப்பொறி(Wet Grinder) வழங்குவதற்காக சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதால் கோவையில் கிரைண்டர் தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசின் இலவச கிரைண்டர் திட்டத்திற்கு உள்நாட்டிலேயே கிரைண்டர் கொள்முதல் செய்ய வலியுறுத்தியும், கிரைண்டர் திட்டத்திற்கு சீன கிரைண்டர்களை பயன்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்தும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தில் சுமார் 700 க்கும் மேற்பட்ட கிரைண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளனர். 
மின்சாரத்தால் இயங்கக்கூடிய கிரைண்டரை கண்டுபிடித்தவர் திரு.சபாபதி என்கிற கொஙகுநாட்டார்.மேலும் இதற்க்கு தேவையான உதிரிபாகங்கள்
Stainless steel Drum
Motor and Gear Box covered with Stainless Sheets
M.S. Bottom Frame
Hard Chrome Plating for the 
arm set

இவை அனைத்துக்கும் குடிசைதொழில்போல் பரவியுள்ளதில் என்னற்ற மக்கள் சார்ந்துள்ளனர்.
குறைந்தபட்சம் பத்து இலட்சம் கிரைண்டர் வழங்கினால் அதில் பாதிஅளவுதான் தமிழ்நாட்டில் தயாரிக்கமுடியும் எனில் அதனை தமிழகத்திலேயே கொள்முதல் செய்யலாமே!
மேலும் அனைத்தும் சீனாவில் வாங்கினால் குறைந்தது ஒருவருடம் நன்றாக் இயங்கினாலே அரிது,சீனாவின் தரம் உலகம் அறிந்தது,ஆனால் கோவையின் கிரைண்டர் உலக தரம்வாய்ந்தது,உலகின் பல்வேறு நாடுகளுக்கு இன்றள்வும் ஏற்றுமதியாகின்றன.சீன கிரைண்டரை மக்கள் பயன்படுத்தும் காலம் வரை உள்நாட்டு தயாரிப்பும் அதனை சார்ந்த தொழில்களும் முடங்கும்

ஜெயலலிதா அவ்ர்களே விவசாயிகளுக்கு உங்களால் பிரச்சனையானபோது எலிகறி சாப்பிட்டனர்,காஞ்சியில் கஞ்சி தொட்டிகண்டீர்,அவர்களுக்காவது பரவயில்லை,கிரைண்டர் தொழிலாலியின் கதி? அவ்ர்களுக்கு சாப்பிட என்ன கிரானைட் கல்லை சலுகையில் வழங்குவீர்களா?
கோவைமக்களின் மீது உங்களுக்கு என்ன கோபம்? உள்நாட்டு தொழில்களுக்கு ஏன் மூடுவிழாவுக்கு அடிதளம் அமைகிறீர்கள்.
த்மிழ் மக்களே கோவைமக்களுக்காக வருத்தபடாமல் சிந்தியுங்கள்

நன்றி

சனி, 16 ஜூலை, 2011

ஆடி மாதம்

  அன்பு நண்பர்களே!


ஆடி மாதம் பல கோனங்களில் சிறந்தது,இதன் இராசி ``கர்கடகம்``
நமக்கு புனிதமான கீதை கிடைத்தது அதில்

கண்ணனின் ஐந்து வாதங்கள்

கண்ணன் அர்ச்சுனனுக்கு எடுத்துரைக்கும் வாதங்கள் ஐந்து.
  • வேதாந்தப் பார்வை
  • சுயதருமப் பார்வை
  • கருமயோகப் பார்வை
  • பக்திப் பார்வை
  • தத்துவப் பார்வை.
வேதாந்த வாதம்[
“வருந்தப்பட வேண்டாததற்கு வருத்தப்படுவது அறிவாளிகளுடைய செயலல்ல. மூன்று காலத்திலும் எந்தப் பொருள் இல்லையோ அதற்கு ஒரு காலத்திலும் இருப்பு என்பதில்லை. இருப்பது போல் தோன்றினாலும் அது நிகழ்காலத் தோற்றம் மட்டும்தான். மூன்று காலத்திலும் எந்தப் பொருள் உள்ளதோ அதற்கு ஒரு காலத்திலும் இல்லாமை என்பதில்லை. புலன்களுக்கு அகப்படாததை இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆன்மா என்ற ஒன்றுதான் அழியாத நிரந்தரமான உட்பொருள். அதை யாராலும் அழிக்க முடியாது. அழிவதாக நமக்கு தெரிவதெல்லாம் உடம்பு தான். “அர்ச்சுனா, எதிரிகளின் மீதுள்ள பாசத்தை விட்டுப் போர் புரி. அவர்கள் உடம்பில் குடிகொண்டிருக்கும் ஆன்மா யாரையும் கொல்லாது, அதை யாராலும் கொல்லவும் முடியாது. அதனால் நீ யாருக்காகவும் வருத்தப்பட வேண்டர்ம்” என்கிறார். இந்த முதல் வாதத்தின் அடிப்படையில் தான் முழு கீதையும் செயல்படுகிறது.
சுயதரும வாதம்
“அர்ச்சுனா, உன்னுடய சுயதருமம் க்ஷத்திரியனுக்குகந்த தருமப்போர் தான். இப்போருக்காக நீ பல ஆண்டுகள் தவமிருந்திருக்கிறாய். போரிலிருந்து பின்வாங்குவது உனக்கு ஒவ்வாத ஒன்று.” ‘சுயதருமமும் உன் சுபாவமும் விதிக்கும் க்ஷ்த்திரிய தருமத்தில் குறை இருந்தாலும் அதைக் கைவிடாதே. எந்தச் செய்கையிலும் நெருப்புக்குப் புகைபோல் ஏதாவதொரு குறை இருக்கத்தான் செய்கிறது’.(18-48)
‘பிறிதொருவனுடைய கடமையை ஏற்று அதை நன்றாகச் செய்தாலும் அதைவிடச் சிறந்தது தன்னுடைய கடமையில் ஈடுபட்டிருப்பதே. அது முறையாக ஆற்றப்படாவிடினும் அதுவே சிறந்தது’ (3-35). ‘சுபாவத்தினால் விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதில் பாவம் சம்பவிப்பதில்லை’ (18-47).
இந்த சுயதருமப் பார்வை எப்படி மற்ற வாதங்களுடன் ஒழுங்காகவும் தர்க்க ரீதியாகவும் பிணைக்கப் படுகின்றது
கர்மயோகபார்வை
இது கருமயோகம் என்று பெயர் கொண்ட புரட்சி மிகுந்த உபதேசம். எளிதில் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடியது. ‘ஒவ்வொரு மனிதனும் செய்யவேண்டிய கடமைகள் பல. அவைகளைச் செய்வதில் விருப்போ அல்லது வெறுப்போ ஒரு பிரச்சினை ஆகக்கூடாது. கடமையைக் கடமைக்காகவே செய்ய வேண்டும். கடமையைச் செய்வதற்குத் தான் உனக்கு அதிகாரம். அவை என்ன பயன் தருகிறதோ, தருமோ என்ற பிரச்சினை உன்னை எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது. பயனுக்காகவோ அல்லது பயனை விரும்பியோ, வெறுத்தோ செயலில் ஈடுபடுவது உன்னை கட்டுப்படுத்தும். இந்தப்போர் உன்னுடைய கடமைகளில் ஒன்று. இதை ஆசையோ, நிராசையோ, கோபமோ தாபமோ இல்லாமல், ஆனால் அலட்சியமும் இல்லாமல், நன்றாகவே செய்யவேண்டும்’. ‘உனது செயல்களை யெல்லாம் எனக்கு அர்ப்பணித்து விட்டு என்னில் நிலைத்த மனதுடன், பயனில் பற்றற்று, அகங்காரத்தை விட்டு, மனக் கொதிப்பில்லாமல் போரிடு’ (3 – 30).
கீதை 2வது அத்தியாயம் 39 வது சுலோகத்திலிருந்து 5வது அத்தியாயம் முடியும் வரை இதை 
கருமயோகம் என்ற ஒரு உயரிய யோக நூலாக விவரிக்கப்படுகிறது.
பக்தி பார்வை
எல்லாம் வல்ல இறைவன் நான். என்னை நம்பு. நீயாகச்செய்வது ஒன்றுமே இல்லை. என்னையன்றி ஓரணுவும் அசையாது.’ 11 வது அத்தியாயத்தில் தன் விசுவ ரூபத்தைக் காட்டிவிட்டு கண்ணன் சொல்கிறான்: ‘இவர்களெல்லாம் என்னால் ஏற்கனவே கொல்லப்பட்டவர்களே. நீ என் கருவி மட்டும் தான்.’ (11–33). ‘உன் செயல்களை யெல்லாம் எனக்காகச் செய். இவ்வுலகிலும் சரி, அவ்வுலகிலும் சரி. நான் உன்னுடன் இருப்பேன்.’ என்று கண்ணன் தன்னை ஆண்டவனாகவே வைத்துப் பேசுவதாக இந்தப் பகுதி உள்ளது.இது எல்லாம் ஈசன் செயல் என்ற பக்தி வாசகத்தை ஆதாரமாகக் கொண்டு எடுத்தாளப்பட்ட வாதம் என்கிற கருத்தும் உண்டு.
தத்துவப் பார்வை
பிரகிருதி என்பது மனிதனின் கூடவே பிறந்த சுபாவம். ‘அகங்காரத்தினால் நீ செய்வதாக நினைத்துக்கொண்டு நான் சொல்வதைக் கேளாமல் செயற்படுவாயானால், அழிந்து போவாய்’ (18–58). ‘அகங்காரத்தின் மயக்கத்தினால் நீ போரிட மாட்டேன் என்று நினைப்பது வெற்றுத் தீர்மானம். அது நடக்காது. உன் பிரகிருதி உன்னை அப்படிச் செய்ய விடாது’ (18 – 59). ‘எந்தக் காரியத்தைச் செய்ய மாட்டேன் என்று நீ பின்வாங்குகிறயோ அதையே செய்யும்படி உன் பிரகிருதி (சுபாவம்) உன்னைக் கட்டாயப்படுத்தும்.’ (18-60). இது பிரகிருதியை ஆதாரமாகக் கொண்டு தத்துவ ரீதியில் சொல்லப்பட்ட ஐந்தாவது வாதம்.
சரணாகதி என்ற முத்தாய்ப்பு
‘உன் சுமையையெல்லாம் என்மேல் இறக்கி வை. தருமம், அதருமம் இரண்டுக்கும் பொறுப்பாளி நீயல்ல என்றறிந்து, என்னையே ஒரே புகலிடமாகக் கொண்டு, உன் கடமையைச் செய்.’ (18-66) என்று கடைசியாகக் கண்ணன் சொல்வதாக உள்ளது.
இவ்வைந்து வாதங்களின் பலத்தால் தான் அர்ச்சுனன் போரிடத் தொடங்குகிறான்.
கீதையின் போதனை[
போர் புரியமாட்டேன் என்ற அர்ச்சுனனை மாற்றுவதற்காக எடுத்தாளப்பட்ட ஐந்து வாதங்கள் மனிதர்கள் அனைவருக்கும் கண்ணனால் கூறப்பட்ட போதனைகள் என இந்து சமய நம்பிக்கையுடையவர்களுக்குச் சொல்லப்படுகிறது.
  • பற்றுகளை அறு. அதற்காக புலனடக்கம் என்ற யோகசாதனையைச் செய்துகொண்டே இரு.
  • பலனில் பற்றற்று சுயதருமத்தை ஒழுகு.
  • ஈசனை மறக்காதே. அந்த இரண்டற்ற பரம்பொருளிடம் சுயநலமற்ற பக்தியைச் செலுத்து.
  • அம்மெய்ப் பொருளையே புகலிடமாகக் கொள்.
  • யாரையும் எதையும் வெறுக்காமலிருக்கும் சமநோக்கு அல்லது பிரும்ம உணர்வு என்னும் முடிவை நோக்கிச் செல்.
முதல் நாள் போர் இன்று ஆரம்பம்!!!......

தமிழ் இலக்கணம்


எழுத்து
தமிழ் இலக்கண நூல்களில் எழுத்து என்ற சொல் மொழியில் வழங்கும் ஒலிகளைக் குறிக்கவும், அவ்வொலிகளுக்குரிய வரிவடிவத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் “அ“ என்ற எழுத்து ஒலிவடிவம், வரிவடிவம் இரண்டையும் குறித்து நிற்கின்றது.
"எழுத்தெனப் படுவ அகர முதல னகர விறுவாய் முப்பஃ தென்ப"
- தொல்காப்பியம்
உயிரும் உடம்புமாம் முப்பது முதலே
- நன்னூல்
தமிழ் இலக்கணத்தில் எழுத்து இரண்டு வகைப்படும்
1. முதலெழுத்து
2. சார்பெழுத்து
முதலெழுத்து
அ முதல் ஔ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், 'க்' முதல் 'ன்' வரையுள்ள 18 மெய்யெழுத்துகளும் ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும்
* உயிரெழுத்துகள்: உயிரெழுத்துகள் 12 அவை அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ
* மெய்யெழுத்துகள்: மெய்யெழுத்துகள் 18 அவை க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன்
உயிரெழுத்துக்கள் குறில், நெடில் என இருண்டு வகைப்படும்.
அ, இ, உ, எ, ஒ என்பன முதலெழுத்தில் குறில் எழுத்துகள் ஆகும்,
மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மூன்று வகைப்படும்.
உயிர் எழுத்துக்கள் - 12
மெய் எழுத்துக்கள் - 18
உயிர்மெய் எழுத்துக்கள் - 216
ஆய்த எழுத்து - 1
தமிழ் எழுத்துக்கள் மொத்தம் - 247
சார்பெழுத்துகள்
உயிர்மெய் ஆய்தம் உயிரள பொற்றள
ப ஃகிய இஉ ஐஔ மஃகான்
தனிநிலை பத்தும் சார்பெழுத் தாகும்
-நன்னூல்
முதலெழுத்துகளைச் சார்ந்து வருவதாலும், முதலெழுத்து திரிபு, விகாரத்தால் பிறந்ததாலும் இவை சார்பெழுத்துகள் என அழைக்கப்படுகின்ற்ன.
சார்பெழுத்து பத்து வகைப்படும்.

வெள்ளி, 15 ஜூலை, 2011

இலங்கைக்கு எதிராக செயல்படுவதா?-

Muralitharan
லண்டன்: தங்களது சுயநலத்துக்காக, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் போய் தஞ்சமடைந்துள்ள சிலர், தங்களது சொந்த நாடான இலங்கைக்கு எதிராக நடந்து வருகின்றனர். இவர்களது வலியுறுத்தலுக்குப் பயந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இலங்கை கிரிக்கெட் தொடரில் பங்கேற்காமல் புறக்கணித்தால் கடும் விளைவுகளை கிரிக்கெட் சந்திக்க நேரிடும் என்று முன்னாள் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

முன்பு தென் ஆப்பிரிக்காவின் இனவெறியைக் கண்டித்து சர்வதேச அளவில் அந்த நாட்டுடன் யாரும் கிரிக்கெட் உறவுகளை வைத்துக் கொள்ளக் கூடாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்தது. இதனால் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்க முடியாமல் போனது தென் ஆப்பிரிக்கா.அதேபோல ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியையும், அதன் இனவெறிக்காக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் புறக்கணித்து வருகின்றன.

இந்த நிலையில் தற்போது இலங்கை கிரிக்கெட் அணிக்கும் அதேபோன்ற ஒரு நிலை நெருங்கி வரத் தொடங்கியுள்ளது. இலங்கை ராணுவத்தினர், ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் நடத்திய அகோர கொடூர கொலை வெறியாட்டக் காட்சிகள் அடங்கிய இலங்கையின் கொலைக்களம் என்ற வீடியோவைப் பார்த்து உலக அளவில் மக்கள் அதிர்ந்து போயுள்ளனர். இந்த கொடூர இனவெறி காட்சிகளால் இப்போது இலங்கையின் கி்ரிக்கெட் நிர்வாகத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது.

இப்படிப்பட்ட ஒரு நாட்டுக்கு கிரிக்கெட் ஆடப் போகக் கூடாது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தை அங்குள்ள தமிழர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளதாக தெரிகிறது. மேலும், ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் கூட இலங்கைக்குச் செல்ல விருப்பமில்லை என்று கூறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே ஆகஸ்ட் 6ம் தேதி தொடங்கவுள்ள இலங்கை கிரிக்கெட் பயணத்தை ரத்து செய்வது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுயள்ளது.

ஆஸ்திரேலிய அணி இந்த யோசனைக்கு வர முக்கியக்காரணம், சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தின் கிராபிக் வடிவிலான டாக்குமென்டரியான போர் கார்னர்ஸ் ஒரு காரணம். இதில், இலங்கை இனப்போரின்போது ராணுவம் நடத்திய கொடூரங்களை அதில் சித்தரித்துள்ளனர். ஆஸ்திரேலியா முழுவதும் இது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

2வது தி ஏஜ் பத்திரிக்கை நடத்திய ஆன்லைன் கருத்துக் கணிப்பு. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்குப் போகலாமா என்று கேட்டு வெளியான அந்தக் கருத்துக் கணிப்பில், 81 சதவீதம் பேர் போகக் கூடாது என்று ஆணித்தரமாக தெரிவித்துள்ளனர். இதனால்தான் இலங்கைக்குப் போவதை மறு பரிசீலனை செய்ய ஆரம்பித்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி.

ஆகஸ்ட்6ம் தேதி தொடங்கவுள்ள தொடரில் ஐந்து ஒரு நாள் போட்டி, 2 டுவென்டி 20 போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து இங்கிலாந்தும், இலங்கையுடனான கிரிக்கெட் உறவுகளைத் துண்டிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இதனால் இலங்கை கிரிக்கெட் வாரியம் மட்டுமல்லாமல் இலங்கை அரசும் கூட அச்சமடைந்துள்ளது. ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் கிரிக்கெட்டைப் புறக்கணிக்க ஆரம்பித்தால் அது நாளை உலக அளவிலான பொருளாதாரத் தடைகளுக்குக் கொண்டு போய் விடக் கூடும் என்று இலங்கை அரசு அஞ்சுகிறது.

இந்த நிலையில், முரளிதரன் மூலம் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் புறக்கணிப்பு முடிவு குறித்து முரளிதரன் கருத்து தெரிவிக்கையில்,

ஒவ்வொரு வீரருக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கலாம். அதை அவர்கள் வெளிப்படுத்தலாம். அதேசமயம், ஒரு நாட்டுடனான கிரிக்கெட் உறவைத்

துண்டிப்பது, புறக்கணிப்பது என்பது தவறான முடிவாகவே இருக்கும்.அதனால் பல கடுமையான விளைவுகளை அந்த விளையாட்டு சந்திக்க நேரிடும்.

அரசியல் வேறு, விளையாட்டு வேறு. இன்று இலங்கை, நேற்று பாகிஸ்தான், ஜிம்பாப்வே என்று ஆஸ்திரேலியா அணி தனது புறக்கணிப்பை தொடருமானால், நாளை அது சில நாடுகளுடன் மட்டுமே கிரிக்கெட் ஆட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். இதனால் கிரிக்கெட் செத்துப் போகும். ஐபிஎல் போட்டிகள் தலை தூக்கி முன்னணி இடத்தைப் பிடிக்கும்.

இங்கிலாந்தைச் சேர்ந்த, ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்து வசித்து வரும், சில தமிழர்களே இந்த செயல்களுக்குப் பின்னணியில் உள்ளனர். தாயகத்திற்குத் திரும்ப முன்வராத அவர்கள் தங்களது சொந்த நாடான இலங்கைக்கு எதிராக செயல்படுகின்றனர். சுயநலத்துடன் அவர்கள் செயல்படுகின்றனர்.

இலங்கை அணி இங்கிலாந்தில் விளையாடியபோது மைதானத்திற்குள்ளும் புகுந்து அவர்கள் பிரச்சினை ஏற்படுத்தினார்கள். மைதானத்திற்கு வெளியேயும் போராட்டம் நடத்தினர்.

ஆனால் இவர்கள் எல்லாம் தங்களது சுயநலத்திற்காக செயல்படக் கூடியவர்கள். இவர்களால் இலங்கைக்கு எந்தவிதப் பிரச்சினையும் வராது என்றே நான் கருதுகிறேன். வேறு ஒரு நாட்டில் புகலிடம் பெற்று வாழ்ந்துவரும் இவர்கள் சொந்த நாட்டுக்கு எதிராக செயல்படுவது கண்டனத்துக்குரியது என்றார் முரளிதரன்.

முரளிதரனின் இந்தப் பேச்சுக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. முரளிதரனின் பேச்சு ஈழத் தமிழர்களை, குறிப்பாக புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் தமிழர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவர் ஒவ்வொரு முறையும் சாதனை படைத்தபோது தலையில் வைத்து தூக்கிக் கொண்டாடிய தமிழர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தமிழர் அமைப்புகளின் பேரவைத் தலைவர் விக்டர் ராஜகுலேந்திரன் கூறுகையில், முரளிதரின் நிலைப்பாட்டை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இலங்கையின் கொலைக்களம் வீடியோவை ஆஸ்திரேலிய வீரர்கள் பார்க்க வேண்டும். அதைப் பார்த்து விட்டு அவர்கள் முடிவெடுக்க வேண்டும். அதன் பின்னர் அவர்கள் என்ன முடிவெடுத்தாலும் சரி.

சிலர் சொல்லலாம், அரசியல் வேறு, விளையாட்டு வேறு என்று.ஆனால் தென் ஆப்பிரிக்க விஷயத்திலும், ஜிம்பாப்வே விஷயத்திலும் இப்படி யாரும் பேசவில்லையே, இப்போது மட்டும் ஏன் பேச வேண்டும்?

இலங்கைக்குப் போகாதீர்கள் என்று ஆஸ்திரேலிய அரசு சொல்லப் போவதில்லை. அது வேறு விஷயம்.ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களுக்கென்று முடிவெடுக்க உரிமை உள்ளது. அவர்கள் அதைச் செய்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ஒட்டுமொத்தமாக முடிவெடுத்து அதை அவர்கள் ஆஸ்திரேலிய அரசுக்குச் சொல்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

முன்பு இலங்கை என்பது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினையாக மட்டுமே இருந்தது. இப்போது அப்படி இல்லை. இன்று அது மனித உரிமைகள் பிரச்சினையாக மாறியுள்ளது என்றார் அவர்.

இதற்கிடையே, இலங்கை பயணம் குறித்து ஆஸ்திரேலிய அரசிடம் கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம் கருத்து கேட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
நன்றி:Thatstamil

புதன், 25 மே, 2011

மோடியை இந்திய பிரதமராக்களாமா?...

           நாளைக்கு லோக்சபாவுக்கு தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு காங்கிரஸுக்கு என்று கூறியவர்களின் எண்ணிக்கையில் 7 சதவீத சரிவு காணப்படுகிறது. அதேசமயம், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமராகலாம் என்று கூறியோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஸ்டார் நீல்சன் கருத்துக் கணிப்பு இதைத் தெரிவிக்கிறது.

மிக மோசமான ஊழல் அரசு 

            2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலால்தான் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் கெட்ட பெயர் கிடைத்துள்ளது. நாடு முழுவதும் காங்கிரஸுக்கு ஒரே மாதிரியாக செல்வாக்கு சரிந்திருப்பதாகவும் இந்த சர்வே கூறுகிறது. மேலும் சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசுகளிலேயே மிகவும் மோசமான ஊழல் நிறைந்த அரசு இதுதான் என்றும் சர்வேயில் பங்கேற்ற பெரும்பான்மையானவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

7 சதவீத செல்வாக்கு குறைவு

            ஸ்டார் நியூஸ்-நீல்சன் இணைந்து நடத்திய இந்த சர்வே, 28 நகரங்களில் 9000 பேரிடம எடுக்கப்பட்டது. இதில் நாளை லோக்சபா தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு காங்கிரஸுக்கு என்று கூறியவர்கள் எண்ணிக்கை 30 சதவீதமாகும். கடந்த பொதுத் தேர்தலின்போது இருந்ததை விட இது 7 சதவீதம் குறைவாகும்.

அதேசமயம், பாஜகவின் செல்வாக்கு கூடவும் இல்லை, குறையவும் இல்லை. அதே 23 சதவீதமாகவே அது இருக்கிறது. அதாவது பாஜகவுக்கு ஆதரவாக மக்கள் இன்னும் பெரிய அளவில் திரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது.

பிரதமர் பதவி-4வது இடத்தில் மோடி

             பிரதமர் பதவிக்கு சிறந்தவர் யார் என்ற கேள்விக்கு மன்மோகன் சிங்குக்ககே மக்களிடையே ஆதரவு காணப்பட்டது. 21 சதவீதம் பேர் அவரது பெயரைச் சொல்லியுள்ளனர். ராகுல் காந்திக்கு 19 சதவீத ஆதரவும், சோனியாவுக்கு 14 சதவீத ஆதரவும் கிடைத்தது. நரேந்திர மோடிதான் சிறந்த பிரதமராக இருப்பார் என்ற கேள்விக்கு 12 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளன என்ற கேள்விக்கு நன்றாக உள்ளதாக 41 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 19 சதவீதம் பேர் மோசம் என்று கூறியுள்ளனர்.

விலைவாசி உயர்வு குறித்து கேட்ட கேள்விக்கு 66 சதவீதம் பேர் மோசமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஊழல் குறித்த கேள்விக்கு 33 சதவீதம் பேர் மோசமாக இருப்பதாக கூறியுள்ளனர்.

கிராமங்களின் நிலை மோசம்

           இந்தியாவில் கிராமங்களின் நிலைமை இன்னும் மோசமாகவே இருப்பதாக 42 சதவீதம் பேரும், விவசாயிகள் நிலைமை மாறவில்லை என்று 43 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

தீவிரவாத மிரட்டல் அதிகரித்திருப்பதாக 44 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சிறப்பாக செயல்படுவதாக பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மன்மோகன் சிங்கின் செல்வாக்கு சற்றம் குறையவில்லை. அது 47 சதவீதமாக உள்ளது. அவர் சிறப்பாக செயல்படுவதாக இவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சனி, 21 மே, 2011

உலகின் இறுதி தீர்ப்பு நாள்!!!,,,

World Endபெங்களூர்: இன்று மாலை 6 மணியுடன் உலகம் அழிந்து விடும் என்று சொன்னவர்கள் கணிப்பில் டன் கணக்கில் மண் விழுந்தது.

உலகின் எந்தப் பகுதியிலும் மாலை 6 மணிக்கும் அதற்குப் பிறகும் கூட ஒன்றும் நடக்கவில்லை.

டூம்ஸ்டே எனும் பெயரில் இன்று 6 மணியோடு உலகம் அழிந்துவிடும் என்று சொன்னவர் அமெரிக்காவின் ஹரால்ட் கேம்பிங் என்ற கிறிஸ்தவ மதத் தலைவர். இவர் ரேடியோ நிலையத்தில் தொகுப்பாளராக வேலை பார்த்து வருபவர்.

இவரது பேச்சு உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.

89 வயதாகும் கேம்பிங், ஏற்கனவே இதுபோன்ற கணிப்புகளைக் கூறியவர்தான். 1994ம் ஆண்டில் உலகம் அழியும் என்று இவர் கூறியிருந்தார். ஆனால் அது புஸ்வாணமாகிப் போனது. ஆனால் தற்போது மே 21ம் தேதியான இன்று மாலை 6 மணிக்கு உலகம் அழிவது உறுதி என்று அவர் கூறினார்.

தான் பணியாற்றும் ரேடியோ நிலையத்தில் நேற்று பணி முடிந்து கிளம்பியபோது அங்கு பணியாற்றி வரும் ஊழியர்களுக்குக் கை குலுக்கிய கேம்பிங், இதுதான் நாம் சந்திக்கும் கடைசி சந்திப்பு என்று கூறிய அவர், நாளை மாலையுடன் உலகம் அழியப் போவதால் நாம் மீண்டும் சந்திக்க மாட்டோம். நானும் இருக்க மாட்டேன் என்று கூறி விட்டுக் கிளம்பினார்.

எப்படி உலகம் அழியும் என்று உறுதியாகச் சொல்கிறீர்கள் என்று கேம்பிங்கிடம் கேட்டபோது, நியூசிலாந்தில் மிகப் பயங்கரமான பூகம்பங்கள் 21ம் தேதி மாலை 6 மணிக்கு ஏற்படும். இதனால் மிகப் பெரிய பேரழிவுகள் ஏற்படும். இந்த பூகம்பங்கள் நியூசிலாந்தோடு நின்று விடாது. அப்படியே ஒவ்வொரு பிராந்தியமாக நகரும். கடைசியில், உலகத்தின் பெரும்பாலான மக்கள் அழிந்து போய் விடுவார்கள். 2 அல்லது 3 சதவீத மக்கள்தான் உயிர் பிழைப்பார்கள். அவர்களையும் கூட கடவுள் தன்னுடன் அழைத்துக் கொண்டு விடுவார்.

எனது கணிப்பு மிகச் சரியானது, துல்லியமானது. நோவாவுக்கு கடவுள் 7 நாள் அவகாசம் கொடுத்தார். மாபெரும் வெள்ள அபாயத்திலிருந்து தப்பித்துக் கொள்ள இந்த கால அவகாசத்தை அவர் கொடுத்தார். ஆனால் நமக்கு கடவுள் 7000 ஆண்டு காலத்தை அவகாசமாக கொடுத்தார். அந்த காலம் யூத காலண்டர்படி மே 21ம் தேதி மாலை 6 மணியுடன் முடிவடைகிறது என்பார் கேம்பிங்.

ஒன்றும் ஆகவில்லை...

ஆனால் மாலை 6 மணியைத் தாண்டிய பிறகும் உலகம் அழியவில்லை. நியூஸிலாந்து மட்டுமல்ல, வேறு எந்தப் பகுதியிலும் சிறு பூகம்பம் கூட நேரவில்லை. 1994-ம் ஆண்டு மட்டுமல்ல, இந்த ஆண்டும் பொய்யாய்ப் போனது கேம்பிங் கணிப்பு.

இனி 2012-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதிக்கு காத்திருக்கிறார்கள் இதுபோன்ற அழிவுச் செய்திகளில் ஆர்வம் கொண்டோர். அது என்ன 21, டிசம்பர் 2012?

அன்றுதான் உலகின் கடைசி தினமாம். அன்றோடு உலகம் அழிந்துவிடுமாம்! இது மாயா இன மக்களின் பழைய கல்வெட்டுப்படி சொல்லப்படும் கணிப்பாம்.

உலகின் ஆயுளை அவ்வப்போது கேள்விக்குறியாக்குபவர்கள்தான் கடைசியில் காணாமல் போயிருக்கிறார்கள். நம்பிக்கையோடு வாழ்க்கையைத் தொடருவோருக்கே இந்த உலகம் இடம் தருகிறது!!



நன்றி:ThatsTamil

புதன், 18 மே, 2011

அஞ்ஞலி

மே-18 வாழ்வில் மறக்கமுடியாத தினம்
                                  இன்று மன்னில் விதைகளாக ஊன்றப்பட்ட என்னற்ற விடுதலை தியாகிகள்,எம் இன மக்கள் பல இலட்சம் மன்னில் கோரமான முறையில் புதைக்கப்பட்டு,பல்லாயிரமக்கள் குடும்பத்தை இழந்த நாள்..
                               
                                 வீர மரணமடைந்தவர்களுக்கும், மன்னில் மாண்டவருக்கும் வீர வணக்கங்களும் அஞ்ஞலிகளையும் காணிக்கையாக்குகிறோம்

                                                      

செவ்வாய், 17 மே, 2011

மின்சாரம்-தமிழக எதிர்காலம்

நண்பர்களே வணக்கம்


மக்களின் பல்வேறு எதிர்பார்புகளுக்கு இடையே பதவி ஏற்றிருக்கும்
முதல்வர் ஜெயலலிதாவுக்கு வணக்கங்களும்,வாழ்துகளும்.
 


இன்று மனிதனுக்கு அடிப்படை உணவு,உடை,இருபிடம்,மின்சாரம்
ஆகவேதான் இதன் தொடர்பான கல்விக்கும்(அடிபடை முதல் ஆராய்சி வரை) ,வேலைவாய்புக்கும் மதிப்பும்,தேவைகளும் அதிகம் உள்ளன.


ஜெயலலிதா அவர்கள் ஐந்தாண்டு முழுமையாக ஆட்சிசெய்து அடுத்த தேர்தலை சந்திக்கும் போதுஅவர்களும் எதிர்கொள்ளும் மக்களின் அத்தியாவசிய பிரச்சனை மின்சாரமாகத்தான் இருக்கும்.ஏனெனில் ஒவ்வொருநாளும் புதிய பெரிய தொழில்சாலைகள் முதல் புதிய வீட்டு மின் இனைப்பு வரை அதிகரித்துகொண்டே போகும்,இதே அளவு மின் உற்பத்தியிலேயே இவை அனைத்தையும் செய்ய இயலுமா?
மின்சாரம் சீராக இருந்தால்தான் சிறுதொழில்களும்,விவசாயமும் சிறப்பாக இருக்கும்,தொழில்துறையும் வளரும்.


ஆனால் தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட மின்சார அளவு --                                  10,214 MW
இது மத்திய மின் பகிர்வு,மற்றும் தனியார் உற்பத்திகளும் சேர்ந்தது,
மேலும்,காற்றாலை மூலம் சுமார் --                                                                         5586 MW,
ஆக தற்போதய மொத்த  மின்சார உற்பத்தி அளவு--                                        15800 MW

தற்போது மின் உற்பத்திக்கு தயாராகி கொண்டிருக்கும் மின் உற்பத்தி நிலையங்கள்
1.வடசென்னை அனல் மின்னிலையம் நிலை-2 யுனிட் 1&2 (600+600)          1200 MW
2.மேட்டூர் அனல் மின் நிலையம் நிலை 3 யுனிட் 1--                                            600 MW

பவானி ஆற்றில் கட்டளை அணை நீர் மின் உற்பத்தி 2&3(2*15)-                       60 MW
மேலும் NTPC NORTH CHENNAI (3*500)--                                                                      1500 MW
NLC  தூத்துக்குடி (2*500)--                                                                                                 1000 MW
உடலங்குடி யில் (2*800)                                                                                                  1600 MW
என்னூர் அனல் மின் நிலையம் --                                                                                 600 MW

மொத்தம்--                                                                                                                        6560MW

மேற்கண்ட அனைத்தும் வரும் ஜூன் 2011 முதல் 2014 வருடதிற்குள் அனைத்து மின் நிலையங்களும் உற்பத்தியைய் தொடங்கிவிடும்
அப்போதும் நாம் பெறுவது 22360 MW, இவை அடுத்த ஐந்தாண்டிற்கு போதுமான உற்பத்தி அளவாக இருக்கும? குறைந்தளவு 25000MW தேவை,





எனவே மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதவும் ,மின்சார துறை அமைச்சரான திரு.நத்தம் ஆர்.விஸ்வநாதன் அவர்களும் இதில் சிறப்பு கவனம் செலுத்தி ஏற்கனவே கட்டுமானபணியில் உள்ளவற்றை துரிதப்படுதியும் ,மேலும் புதிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க திட்டமிட்டு அதை செயல் படுத்தி வரும் 2014ல்லாவது கூடுதல் மின் உற்பதியை ஏற்படுத்தினால் மீண்டும் தைரியமாக அடுத்த சட்டசபை தேர்தலை சந்திக்கலாம்
இல்லாவிடில் மீண்டும் ?.........


ஏனென்றால் மக்கள் மாற்றத்தை விரும்பித்தான் ஆட்சியை உங்களிடம் தந்துள்ளனர்


நன்றி


குறைகளை சுட்டிடவேண்டுகிறேன்









வெள்ளி, 8 ஏப்ரல், 2011

அன்னா ஹஸாரே உண்ணாவிரதம்...சிந்திக்கவும்

டெல்லி: ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி, பிரபல சமூக சேவகரும், காந்தியவாதியுமான அன்னா ஹசாரே (வயது 73) கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் தொடங்கிய உண்ணாவிரதத்துக்கு நாடு முழுவதிலுமிருந்து ஆதரவு குவிந்த வண்ணம் உள்ளது.


ஜந்தர்மந்தரில் நடக்கும் அன்னா ஹஸாரேவின் இந்த சாகும் வரை உண்ணாவிரதம் இன்ரு 4-வது நாளை எட்டியுள்ளதால், மக்கள் பெரும் கவலையுடன் அவரது நிலையைக் கவனிக்க ஆரம்பித்துள்ளனர்.
  

Anna Hazare

இந்திய இராணுவத்தில் 15 ஆண்டு காலம் எல்லையில் நின்றுப் போராடியவர் அண்ணா ஹஸாரே. காந்தியவாதி. சமுக இணைய தளங்களிலும் நாடு முழுவதும் இருந்து தங்கள் ஆதரவை பதிவு செய்து வருகின்றனர். லட்சக்கணக்கான இளைஞர்கள் அவரது இந்த முயற்சியில் தங்களையும் இணைத்துக்கொள்ள முன்வந்துள்ளனர்.

அதிலும் ஸ்பெக்ட்ரம் ஊழலின் காரணமாக ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ந்துபோய் இருக்கும் இந்த தருணத்தில், ஹசாரே சரியான சமயத்தில் முன்வைத்துள்ளார் என்று கட்சிகளுக்கு அப்பால் நின்று குரல்கள் வரத் தொடங்கியுள்ளன.

இந்தநாள் வரை மகாராஷ்ட்ரா ஊழல் அரசியல்வாதிகளின் கண்களில் விரலைவிட்டு ஆட்டி வந்த அண்ணா ஹஸாரே, தற்போது டெல்லியில் மையம் கொண்டிருப்பதை பார்த்து மத்திய அரசு மிரண்டு போய் உள்ளது.

இதனை தொடர்ந்து சோனியா காந்தி அண்ணா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு கூறியுள்ளார். விரைவில் அதற்க்கு தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்கும் அமைச்சரவைக் கூட்டம் கூட்டி, ஹஸாரேயின் உண்ணாவிரதம் குறித்து விவாதித்தார்.

ஹஸாரோவை தலைவராக்க முடியாது...

அவரது பிரதிநிதிகளாக சுவாமி அக்னிவேஷ், அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் மத்திய அமைச்சர் கபில் சிபிலை புதன்கிழமை நள்ளிரவு இரண்டு முறை சந்தித்துப் பேசினார்கள்.

அப்போது லோக்பால் மசோதாவை திருத்தியமைப்பதற்காக உருவாக்கப்படும் கூட்டுக் குழுவில் அரசு தரப்பு, சமூக அமைப்புகள் ஆகியன சார்பில் சரிசமமான எண்ணிக்கையில் பிரதிநிதிகளை நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கையை அரசு தரப்பினர் ஏற்றுக்கொண்டனர்.

ஆனால் அந்த குழுவுக்கு ஹஸாரேயை தலைவராக நியமிக்க முடியாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுவிட்டது. எனவே பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. ஹஸாரே உண்ணாவிரதத்தைத் தொடர்கிறார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரிடம் ஆலோசனை நடத்திவிட்டு வெள்ளிக்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், கூட்டுக் குழு அமைப்பது பற்றி அரசு அறிவிப்பு வெளியிடவேண்டும் என்றார். இந்த நிலையில் இந்த குழுவுக்கு பிரதமர் அல்லது மத்திய நிதி அமைச்சர் தலைவராக நியமிக்கப்படக்கூடும் என அரசு தரப்பு தெரிவித்ததாக விஷயமறிந்த வட்டாரங்கள் கூறின.

தொடர் உண்ணாவிரதம் குறித்து ஹஸாரே செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

என்னால் நிச்சயம் ஒருவாரம் நலமுடன் இருக்க முடியும். எனது உடல்நிலை குறித்து மக்கள் கவலைப்பட வேண்டாம். சிறிதளவு மட்டுமே பலவீனமாக உணர்கிறேன். 1.5 கிலோ எடை குறைந்துவிட்டது. கடவுள் என்னுடன் இருக்கிறார். அவர் காப்பாற்றுவார்.

மிரட்டல்கள் இருந்தாலும் உண்மையை ஒருபோதும் கைவிடக்கூடாது. 12 நீதிமன்ற வழக்குகளை நான் சந்தித்திருக்கிறேன், எனக்காக பணம் வாங்காமல் வாதாடும் வழக்கறிஞர்கள் உள்ளனர். உண்மையை ஒருபோதும் நாம் கைவிடக்கூடாது.

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவர் உண்ணாவிரதம் மேற்கொள்வது ஒரு தவறான பாதை எனக் கூறியுள்ளார்.

மகாத்மா காந்தி உண்ணாவிரதம் இருந்தபோது அவர் பிறந்திருப்பார் என நான் நினைக்கவில்லை. உண்ணாவிரதப் போராட்டம் கடைசி போக்கிடமாக பயன்படுத்தப்படுகிறது.

முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒருவர்தான் இந்த கூட்டுக் குழுவுக்கு தலைவராக நியமிக்கப்படவேண்டும். கூட்டுக்குழுவுக்கு தலைவராக இருக்கும் எண்ணம் எனக்கு இல்லை. அப்படி கூட்டுக் குழு அமையும்பட்சத்தில் அதில் உறுப்பினராக இருக்க விரும்புகிறேன்.

லோக்பால் மசோதாவை திருத்தியமைப்பதற்காக அமைக்கப்படும் எந்த குழுவிலும் தான் இடம் பெறவேண்டுமானால், அந்த குழுவில் சோனியா காந்தியும் உறுப்பினராக இடம் பெறவேண்டும்," என்றார் ஹஸாரே.

இதற்கிடையே, லோக்பால் கமிட்டி தலைவராக கர்நாடக லோகாயுத சந்தோஷ் ஹெக்டே மற்றும் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே எஸ் வர்மா ஆகியோர் இருக்கலாம் என்ற ஹஸாரேவின் ஆலோசனையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.



நன்றி: One India Tamil



செவ்வாய், 5 ஏப்ரல், 2011

தமிழா!..

அதிபராடா நீயெல்லாம் ?....


கொழும்பு: இந்திய மக்கள் 1983ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பை மகிழ்ச்சியைக் கொண்டாடட்டும் என்று நாங்கள் மகிழ்ச்சியை விட்டுக் கொடுத்துள்ளோம் என்று ராஜபக்சே கூறியுள்ளார்.


இந்தியாவிடம் தோல்வி அடைந்த இலங்கை கிரிக்கெட் அணி நாடு திரும்பி விட்டது. அவர்கள் ராஜபக்சேவை அவரது அதிபர் மாளிகைக்குச் சென்று சந்தித்தனர்.

அப்போது ஆளுக்கு ஒரு தங்க நாணயமும், கல் பதித்த பிரேஸ்லெட்டும் கொடுத்து அனைவரையும் கெளரவித்தார் ராஜபக்சே. பின்னர் வீரர்களைப் பாராட்டிப் பேசினார்.

அவர் பேசுகையில், கோப்பையை வென்றீர்களோ, இல்லையோ, இறுதிப் போட்டி வரை போனதே பெரிய சாதனைதான். நீங்கள் எங்களைப் பெருமைப்படுத்தி விட்டீர்கள்.

தோல்வி ஏமாற்றமாகத்தான் உள்ளது. இருப்பினும் கெளரவமாக தோற்றுள்ளீர்கள். எனது இந்திய நண்பர்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன், 2 கோடி மக்கள் தொகையைக் கொண்ட எங்களது சின்ன நாடு, 100 கோடி மக்களைக் கொண்ட உங்களுக்கு சந்தோஷத்தை விட்டுக் கொடுத்துள்ளது. 1983ம் ஆண்டுக்குப் பிறகு 2வது முறையாக சந்தோஷமாக நீங்கள் இருக்க நாங்களே காரணம்.

முத்தையா முரளிதரன் ஆற்றிய பங்கு அளப்பறியது. தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் சிறப்பாக பந்து வீசினார் முரளிதரன். அவருக்கு இந்த நாடு கடன்பட்டுள்ளது என்றார் ராஜபக்சே. பின்னர் முரளிதரனை முதுகில் தட்டிக் கொடுத்து பெருமைப்பட்டார்.



இதை வாசிக்கும்போது யாருக்கேனும் எரிச்சலோ கோபமோ வந்தால் நாம் தமிழ்ர்தான் என என்னுகிறேன்
ஒரு நாட்டின் அதிபர் சிறுபிள்ளை தனமாக எவ்வளவு முதிர்ச்சி இல்லாமல் இருக்கிரார் என எடுத்து காட்டுகிறது இவரது கருத்து,


முரளி தமிழன் என்பதால் நாடு அவருக்கு கடமைப்பட்டுள்ளது என்று ஏனய்யா தமிழனை கூறுகிறாய்,அவரும் உன் நாட்டுக்காகத்தானே விளையாடினார்


மேலும் தமிழ் நாட்டிலிருந்து அஸ்வின்னு ஒருத்தர் இந்திய அணியில் உள்ளார்
தமிழக அரசியல்வாதிகளும் கண்டு கொள்ளவில்லை,தமிழக கிரிகெட் அணியும் கண்டு கொண்டதாக தெரியவில்லை,அட தமிழ் நாளேடுகள் கூட ஒரு செய்தி வெளியிடவில்லை,ஆனால் இவர் இரண்டாவது காலிருதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பந்து வீசி வாட்சனை 25 ரன்னுக்கும் பாண்டிங்கை 104 ரன்னிலும் வீழ்த்தியவர் என்பது குறிப்பிடதக்கது
எப்போதுதான் உள்ளூர்காரனை மதிப்பார்களோ தெரியவில்லை

சனி, 2 ஏப்ரல், 2011

எங்கே போனது தன்மானம்?.........

                             இன்று உலக கோப்பை கிரிக்கெட்டை பார்க்க வந்த ராஷபக்‌ஷேவை கடுமையாக தமிழ்நாட்டில் எதிர்த்தார்களா என்றால் இல்லை என மார்தட்டிக்கலாம்
               அட எங்கே போனது தமிழனின் தன்மானமும் போர்குணமும்!


ம.தி.மு.க வும்,திருமாவளவனும் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்,
எம் தமிழ் மக்களை கொலைசெய்த ஒரு போர்குற்றவாளி எந்த மக்களுக்கு எதிராக செய்தானோ அவர்கள் மண்ணில் சர்வசாதரனமாக வந்து இறங்கி,சொகுசு மகிழூந்தில் மறுநாள் (இன்று)திருப்பதி வெங்கடேசனிடம் இலங்கை கிரிகெட்டில் வெற்றி பெற வேண்டிக்கொண்டு மும்பை செல்கிறான்.
   கோவையில் மட்டும் எதிப்பு தெரிவித்த ம.தி.மு.க.வினர் கைது செய்யப்படுகிரனர்.
கர்நாடகாவில் எதிர்த்த தமிழர் கைது செய்யப்படுகிறனர்
அய்யா சீமான் அவர்களே,பழநெடுமாறன் அவர்களே,கவிஞர் தாமரை அவர்களே நீங்கெள்ளாம் என்ன செய்கிறீர்கள்.
உங்கள் பேச்சும் வீரமும் ஏமாந்த எம்மக்களிடம் மட்டும் தானா?
ஏன் நீங்கெள்லாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை
அந்த கொடும்பாவி வந்து தமிழ்நாட்டில் தங்கும்போதோ அல்லது வழி நெடுகிலுமா உங்களால் எதிர்ப்பு காட்ட முடியவில்லை!!


கடந்தமுறை லண்டனுக்கும் ,அமெரிக்காவுக்கும் சென்றபோது அங்கு தமிழ்ர்கள் காட்டிய எதிர்பாலும் கோஷத்தாலும் துண்ட கானம் துணியகானமுனு ஓடிபோனான் இதே ராஷபக்‌ஷே !


இங்கு தமிழ் நாட்டில் பார்க்கும் போது நம் தமிழரினம் மெல்ல கரைந்துகொண்டிருக்கிரது,சூடு சொரனை இல்லாமல் திரிகிறோம்


கருணாநிதி கூட்டத்திற்க்கும்,ஜெயலலிதா கூட்டத்திற்க்கும் ஓட்டு பொறுக்குவதிலேயே கவனம் உள்ளது.


மக்களே நாம் தமிழர்கள் ,நமக்கென சரித்திரம் உண்டு ,தன்மானம் உண்டு,வீரம் உண்டு,
எப்போதுதான் விழிப்பீர்!


இலவசங்களில் கனவு காணாமல் நம் இனத்தை அழித்தவனை நாட்டைவிட்டு வெளியேற குரல் கொடுங்கள்,
விளயாட்டு வேறு!,தன்மான உனர்ச்சிகள் வேறு,விளையாட்டை பார்க்க வந்தானு வேடிக்கைபார்காதிர்கள்,


சீமான்,பழநெடுமாறன் போன்றோர் இனியும் தமிழர் இயக்கம் என்று போலி வேடம் போடவேண்டாம்
எம்மக்களை காப்பாற்ற ஒருவன் வருவான்
அதுவரை தமிழர்களே ஜாலியா கிரிகெட் பாருங்கள்


வாழ்க நம் தமிழர் இனம்!





சனி, 5 மார்ச், 2011

கலைஞருக்கு வாழ்த்து

ஆஹா !

















தி.மு.க. ,காங்கிரஸ் கூட்டனி முறிந்தது!
அருமையான முடிவு கலைஞர் அவர்களே, 
இராஜாத்தி அம்மாளுக்கும் கனிமொழிக்கும் என்ன ஆகுமோ என இதுநாள் வரை 
கூட்டனி தர்மம் பேசி வந்தீர்கள்!
இந்த முடிவை சென்ற மே 17க்கு முன்னமே எடுத்திருந்தால் கவிஞர் தாமரை 
கூறியது போல் எவ்வளவோ வகையில் எம் தமிழர்களுக்காக 
போராடியிருக்கலாம்.
இந்த தேர்தலில் நீங்கள் தோற்றாலும் மானமுள்ள தோல்வி!
இந்த தோல்வியால் உங்களுக்கு அவமானம் இல்லை
நீங்கள் இத்தேர்தலில் ஜெயித்தால் முன் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடுங்கள்


இனிமேலாவது எம் தமிழ் மக்களுக்காகவும் மீனவர்களுக்காகவும் குரல் கொடுங்கள்,
மக்களே நம் தமிழ் இனத்தை அழித்த,இன்றும் இந்தியர்களாக உள்ள தமிழர்களை காக்க மறுக்கும் காங்கிரசை தமிழ்நாட்டில் இருந்து தூக்கி எறிவோம்,
EVKS இளங்கோவன் போன்ற என்னற்ற காங்கிரஸ் எனும் தோற்றத்தில் ஒழிந்திருக்கும் தமிழ் துரோகிகளை தூக்கிஎறிவோம் இத்தேர்தலில்