இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 2 மார்ச், 2011

!!*****மகாசிவராத்திரி *****!!

                                                                ஓம் நமசிவாயா


               மகா மாதத்தில் வரும் தேய்பிறைச் சதுர்த்தி இரவே மகிமை மிக்க 
மகா சிவராத்திரி ஆகும், இந்நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந்த புராணம்,பத்ம புராணம்,அக்னி புரானம் நூல்களில் கூறப்பட்டுள்ளது.


   இவ்விரதம் பற்றி பல்வேறு ஐதீகங்கள் இருந்தாலும் ஒருகாலத்தில் உலக பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடம் ஒடுங்கின,
மீண்டும் உலகம் தோன்ற அளவில்லா கருணை உள்ளம் கொண்ட 
அம்பிகை ,இடைவிடாது தியானம் செய்தார்


இரவு முழுவதும் இடைவிடாது நான்கு யாமமும் பிரார்த்தனை செய்தார்


முதல் யாமத்தில் -
பஞ்ச கவ்விய அபிஷேகம்,பொங்கல் நிவேதனம்,வில்வத்தினால் 
அர்ச்சனை,


இரண்டாம்யாமத்தில் பஞ்சாமிர்தஅபிஷேகம்,பாயாசநிவேதனம்,தாமரை 
மலர்களால்அர்ச்சனை,


மூன்றாம் யாமத்தில் 
தேன் அபிஷேகம், நெய்யும் மாவும் கலந்து நிவேதனம்,நந்தியாவட்டை மலர்களால் அர்ச்சனை,


நான்காம் யாமத்தில்
கருப்பஞ்சாறு அபிஷேகம்,வெண்பொங்கள் நிவேதனம்,நந்தியாவட்டை மலர்களால் அர்ச்சனை 


என்று நான்கு யாமமும் பிரார்தித்தார்
இறைவனும் மீண்டும்  உலகங்களை உண்டாக்கி அனைத்து உயிர்களைப் படைத்தார்


பார்வதிதேவி இறைவனிடம் ``நான் தங்களை நினைத்து பிரார்த்தித்த காலம் சிவராத்திரி எனவும் இதனை சிவராத்திரி விரதம் என யாவரும்
அனுஷ்டிக்க வேண்டும் எனவும்,
கடைபிடிப்பவர்கள் எல்லா நலனும் பெற்று முக்தியடையவேண்டும் ``என வேண்டினார்,இறைவனும் அருளினார். 
அதன் பின் நந்திப்பெருமான் முதல் இன்று வரை இவ்விரதம் 
அனுஷ்டிக்கபடுகிறது.


சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும். இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.
புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பதற்கு ஈடாகாது. 



     சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்


    ``இந்த நாள் மிகவும் சக்தி வாய்ந்த நாளாகும். விஞ்ஞான ரீதியாகவே மகா சிவராத்திரி நாள், ஒரு மனிதனின் ஆன்ம வளர்ச்சிக்கு மிகப்பெரும் உறுதுணையாக இருக்கிறது. மகா சிவராத்திரி நாளன்று, கோள்களின் அமைப்பானது ஒரு குறிப்பிட்ட நிலையில் இருக்கிறது. அந்த நாளன்று விழிப்புடன், முதுகுத் தண்டை நேர்நிலையில் வைத்திருப்பதன் மூலம் ஒரு மனிதனுக்குள் ஆன்ம எழுச்சி நிகழ இயற்கையாகவே ஒரு சூழ்நிலை உருவாகிறது. மிக நீண்ட வருடங்களாகவே இந்தியாவின் பல்வேறு புனிதத் தலங்களிலும் ஆலயங்களிலும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. புராணங் கள், இதிகாசங்கள், சான்றோர்கள் கூற்றுப்படி, இந்நாளின் இரவன்று உறங்காமல் விழித்திருப்பதற் கான பலன்கள் எடுத்துரைக்கப்பட்டு, மக்களை விழித்திருக்கச் செய்வதற்காகப் பல உபாயங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

யோக மரபில் சிவபெருமான் ஒரு கடவுளாக வழிபடப்படாமல், ஆதி குரு - முதலாவது குருவாகக் கருதப்படுகிறார். ஆன்மிகப் பாதையில் இருக்கும் ஒரு மனிதர் அந்த நாளில்தான் கயிலாய மலையுடன் ஒன்றிணைகிறார். அவர் ஒரு மலையைப்போல முழுமையான நிச்சலனமாகிறார். பல்லாண்டு ஆத்ம சாதனைகளுக்குப் பின்னர், ஒரு நாள் அவர் முழு நிச்சலனத்தில் ஆழ்கிறார். அந்த நாள்தான் மகா சிவராத்திரி நாள். அந்த நாளில் அவருள் இருக்கும் அனைத்து அசைவுகளும் நின்று போகின்றன. எனவே அந்த நாளினை அவர்கள் நிச்சலனத் திற்குரிய நாளாகக் கருதுகிறார்கள்.

மதங்கள் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையைச் சாராமல், அறிவியல் ரீதியாகவே அனைவருக்கும் ஆன்மிக வளர்ச்சிக்குத் துணைபுரிவதால், மகா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் ஈஷா யோக மையத்தில் இரவு முழுவதும் ஒரு இறைவிழாவாக நிகழ்கிறது.




                 மகாசிவராத்திரி விஞ்ஞான பூர்வமாக நடக்கும் 
இயற்கையான நிகழ்வு. சூரிய ஒளிவட்டம் தென் பகுதியிலிருந்து வட பகுதிக்கு செல்லும் தினம்.
பூமியின் மேல் மண்டலத்தில் ஒரு வகை ஈர்ப்பு ஏற்படும். அன்றைய தினத்தில் முதுகு தண்டை நேராக வைத்து உட்காரும் போது சக்தி மேல் நோக்கி எழும். எனவேதான் அன்றைய தினத்தில் தூங்காமல் சக்தியை உணருங்கள். வேறு ஏதாவது இடத்தில் வேறு செயல்களை செய்யும் போது முதுது தண்டில் ஆன்மிக சக்தி எழும்பாது. மகா சிவராத்திரி தினத்தில் முதுகு தண்டை நேராக வைத்திருக்கும் நிலையில் உட்கார்ந்திருந்தால் ஆன்மிகம் உச்சமாகும்.``

   எனவே நாம் அர்ச்சனையெல்லாம் செய்யாவிட்டாலும் இறைவனை தியானித்து ``ஓம் நமச்சிவாயா``எனும் மந்திரத்தை உச்சரித்து முத்தி 
பெருவோம்.
திருச்சிறம்பலம்





என்னால் முடிந்த அர்ச்சனை








2 கருத்துகள்:

சமுத்ரா சொன்னது…

நல்ல பதிவு...நன்றி

vijaykarthik சொன்னது…

சமுத்ரா அவர்களுக்கு நன்றி