இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 5 மார்ச், 2011

கலைஞருக்கு வாழ்த்து

ஆஹா !

















தி.மு.க. ,காங்கிரஸ் கூட்டனி முறிந்தது!
அருமையான முடிவு கலைஞர் அவர்களே, 
இராஜாத்தி அம்மாளுக்கும் கனிமொழிக்கும் என்ன ஆகுமோ என இதுநாள் வரை 
கூட்டனி தர்மம் பேசி வந்தீர்கள்!
இந்த முடிவை சென்ற மே 17க்கு முன்னமே எடுத்திருந்தால் கவிஞர் தாமரை 
கூறியது போல் எவ்வளவோ வகையில் எம் தமிழர்களுக்காக 
போராடியிருக்கலாம்.
இந்த தேர்தலில் நீங்கள் தோற்றாலும் மானமுள்ள தோல்வி!
இந்த தோல்வியால் உங்களுக்கு அவமானம் இல்லை
நீங்கள் இத்தேர்தலில் ஜெயித்தால் முன் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடுங்கள்


இனிமேலாவது எம் தமிழ் மக்களுக்காகவும் மீனவர்களுக்காகவும் குரல் கொடுங்கள்,
மக்களே நம் தமிழ் இனத்தை அழித்த,இன்றும் இந்தியர்களாக உள்ள தமிழர்களை காக்க மறுக்கும் காங்கிரசை தமிழ்நாட்டில் இருந்து தூக்கி எறிவோம்,
EVKS இளங்கோவன் போன்ற என்னற்ற காங்கிரஸ் எனும் தோற்றத்தில் ஒழிந்திருக்கும் தமிழ் துரோகிகளை தூக்கிஎறிவோம் இத்தேர்தலில்






வெள்ளி, 4 மார்ச், 2011

நாம் இந்தியர்,...



அன்பு தோழர்களே !
அனைவருக்கும் வ்ணக்கம்.
இந்தியவின் பெருமை நமது ஜனநாயகம்,யாராலும் மறுக்கமுடியாத உன்மை!,பல்வேறு மொழிகள்,இனங்கள்,மதங்கள்,பழக்கங்கள்,பழைய நடைமுறைகள்,அதற்கானசட்டதிட்ட்ங்கள் இப்படி பாரம்பரியம் நெடும்பயணம் நீண்டுகொண்டு போகிறது...

இவ்வாறு பரந்து விரிந்துள்ள நம்மக்கள் அனைவருக்கும் வாழ அதற்கு தேவையான வசதிகளை செய்து தந்து பாதுகாப்பாகவும் அமைதியாகவும் வாழ அதற்கான கட்டமைப்பை நிர்வாகம் செய்யவும் நாமே நமது பிரதிநிதிகளை அமர்த்துகிறோம்.இவ்வாறு நாம் அமர்தும் பிரதிநிதிகள் சமுதாயத்தில் ஒழுக்கமானவர்களாகவும்,திறமையானவர்களாகவும் உலக அறிவு உள்ளவர்களாகவும் இருக்கவேண்டும் .
 தற்போது நம்மை நிர்வாகம் செய்தவர்கள்,செய்பவர்கள் அவ்வாறு உள்ளார்களா என்பது அனைத்து மக்களும் நன்கு அறிவர்கள், நாம் சாதரனமாக வேறு வழியில்லாமல் பழக்கடையில் தேவைபடும் பழம் வாங்கும் போது அனைத்தும் சொத்தை,அதில் எது ஓரளவுக்கு நல்லதோ அதையே தேர்ந்தெடுப்போம்.அதேபோலத்தான் தேர்தலின் இறுதிக்கட்டத்தில் எவன் ஒருவன் சிறந்தவனோ அவனையே தேர்ந்தெடுக்கவேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.
உலக நாடுகள் மற்றும் அண்டை நாடுகளுடன் நட்புறவு கொள்வது,பகமை கொள்வது,அவர்கள் நம்மக்களுக்கு எதிராக நடந்துகொள்ளும் போது கண்டிப்பதும், தவறுகளை சுட்டிக்காட்டுவதற்க்கும் இந்தியா முழுமையும் நிர்வாகம் செய்யும் நடுவன் அரசுக்கே உரிமைஉண்டு,அதனால்தான் இன்றுவரை நாம் தந்தி அனுப்பிக்கொண்டிருக்கிறோம் நம் தமிழர்களாக்காக!
மத்தியிலும்,மாநிலத்திலும்(தமிழ்நாடு அல்ல) தற்போது ஆட்சி புரியும் காங்கிரஸ் சிறப்பாக 
செயல்படுகிறதா?,மக்களை பாதுகாக்கிறதா?
இந்தியாவின் ஒருபழம்பெருமைவாய்ந்த ஒருஇனத்தையே அண்டைநாட்டில் இலங்கையில்
அடியோடுஅழித்தொழிக்க அனைத்து உதவிகளையும் செய்து அதற்கு ஆயிரம் காரணங்களையும் 
கூறி ஞாயப்படுத்திக்கொள்கிறது.
தமிழ் மன்னில் இருந்து அன்றாடம் வாழ வாழ்வின் ஆதாரங்களை தேடி கடலில் மீன் பிடிக்கச் செல்பவர்களை தமிழர் என்கிற ஒரே காரணத்திற்காக மனிதர்கள் என்றும் பாராமல் வன்கொடுமை செய்து சுட்டு தள்ளுகிரார்கள் சிங்கள இராணுவத்தினர்.இந்தியாவில் எங்கேனும் இயற்கை சீற்றத்தால் அழிவு,தீவரவாதிகளால் அழிவு எனும் போது நாம் அனைவரும் இந்தியர் என்று கூறி தேவையான நிதிஉதவி ,பொருள் உதவிகள் என முதல் ஆளாக செய்கிறோம்,ஆனால் தமிழர்களுக்கு என குரல் கொடுப்போர் எவருமில்லை. காங்கிரஸ் சார்பில் தமிழ்நாட்டு துரோகியான EVKS இளங்கோவன் போன்றோரின் தமிழினத்துக்கு எதிரான அறிக்கைகள் அவர்கள் நம்மை எவ்வாறு மிதிக்கிறார்கள் என்பதை அனைவரும் அறியவேண்டும்.
 தமிழினத்தை அழித்த காங்கிரசை,தமிழ் மீனவர்களை காத்திட மறுக்கும் காங்கிரசை!தமிழ் மன்னில் ஆட்சி செய்யதுடிக்கும் காங்கிரசை,தமிழ்மன்னில் திராவிட கட்சிகளின் மேல் சவாரி செய்யும் காங்கிரசை,ஆயிரம் கோஷ்டி பூசல் உள்ள காங்கிரசை,நிலையற்ற காங்கிரசை தமிழ் மன்னில் இருந்து வேரோடு,வேரடிமன்னோடு 
 மக்களே தூக்கி எறியுங்கள்.கறைபடியாத கை, நேர்மையானவர்கள்  என் கூறிக்கொள்ளும் காங்கிரஸ்காரர்களே ஏன் திராவிடர்களுடன் தமிழர்களுடன் ஆட்சியில் கூட்டனிகேட்டு இத்தனை பிரயத்தனப்ப்டுகிறீர்கள்,உங்களுக்கு எங்களை நிர்வாகம் செய்ய என்ன தகுதி இருக்கிறது?
மேற்கு வளைகுடா நாடுகளில் கடுமையான கட்டுபாடுகள் அடக்கு முறைகளை மீறி 
மன்னராட்சியை எதிர்த்து கிளர்சி நடைபெறும்போது ஜன்நாயக நாட்டில் 
மிகவும் எளிது.....







மீண்டும் தொடர்வேன்!,தவறுகளிருந்தால் சுட்டிகாட்டுங்கள்,திருந்த வாய்பளியுங்கள்...!!!

குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு
( குறள் எண் : 544 )





மு.வ : குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும்.
சாலமன் பாப்பையா :
 குடிமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தும் 
சிறந்த ஆட்சியாளரின் கால்களைச் சுற்றியே மக்கள் வாழ்வர்.

புதன், 2 மார்ச், 2011

!!*****மகாசிவராத்திரி *****!!

                                                                ஓம் நமசிவாயா


               மகா மாதத்தில் வரும் தேய்பிறைச் சதுர்த்தி இரவே மகிமை மிக்க 
மகா சிவராத்திரி ஆகும், இந்நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந்த புராணம்,பத்ம புராணம்,அக்னி புரானம் நூல்களில் கூறப்பட்டுள்ளது.


   இவ்விரதம் பற்றி பல்வேறு ஐதீகங்கள் இருந்தாலும் ஒருகாலத்தில் உலக பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடம் ஒடுங்கின,
மீண்டும் உலகம் தோன்ற அளவில்லா கருணை உள்ளம் கொண்ட 
அம்பிகை ,இடைவிடாது தியானம் செய்தார்


இரவு முழுவதும் இடைவிடாது நான்கு யாமமும் பிரார்த்தனை செய்தார்


முதல் யாமத்தில் -
பஞ்ச கவ்விய அபிஷேகம்,பொங்கல் நிவேதனம்,வில்வத்தினால் 
அர்ச்சனை,


இரண்டாம்யாமத்தில் பஞ்சாமிர்தஅபிஷேகம்,பாயாசநிவேதனம்,தாமரை 
மலர்களால்அர்ச்சனை,


மூன்றாம் யாமத்தில் 
தேன் அபிஷேகம், நெய்யும் மாவும் கலந்து நிவேதனம்,நந்தியாவட்டை மலர்களால் அர்ச்சனை,


நான்காம் யாமத்தில்
கருப்பஞ்சாறு அபிஷேகம்,வெண்பொங்கள் நிவேதனம்,நந்தியாவட்டை மலர்களால் அர்ச்சனை 


என்று நான்கு யாமமும் பிரார்தித்தார்
இறைவனும் மீண்டும்  உலகங்களை உண்டாக்கி அனைத்து உயிர்களைப் படைத்தார்


பார்வதிதேவி இறைவனிடம் ``நான் தங்களை நினைத்து பிரார்த்தித்த காலம் சிவராத்திரி எனவும் இதனை சிவராத்திரி விரதம் என யாவரும்
அனுஷ்டிக்க வேண்டும் எனவும்,
கடைபிடிப்பவர்கள் எல்லா நலனும் பெற்று முக்தியடையவேண்டும் ``என வேண்டினார்,இறைவனும் அருளினார். 
அதன் பின் நந்திப்பெருமான் முதல் இன்று வரை இவ்விரதம் 
அனுஷ்டிக்கபடுகிறது.


சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும். இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.
புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பதற்கு ஈடாகாது. 



     சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்


    ``இந்த நாள் மிகவும் சக்தி வாய்ந்த நாளாகும். விஞ்ஞான ரீதியாகவே மகா சிவராத்திரி நாள், ஒரு மனிதனின் ஆன்ம வளர்ச்சிக்கு மிகப்பெரும் உறுதுணையாக இருக்கிறது. மகா சிவராத்திரி நாளன்று, கோள்களின் அமைப்பானது ஒரு குறிப்பிட்ட நிலையில் இருக்கிறது. அந்த நாளன்று விழிப்புடன், முதுகுத் தண்டை நேர்நிலையில் வைத்திருப்பதன் மூலம் ஒரு மனிதனுக்குள் ஆன்ம எழுச்சி நிகழ இயற்கையாகவே ஒரு சூழ்நிலை உருவாகிறது. மிக நீண்ட வருடங்களாகவே இந்தியாவின் பல்வேறு புனிதத் தலங்களிலும் ஆலயங்களிலும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. புராணங் கள், இதிகாசங்கள், சான்றோர்கள் கூற்றுப்படி, இந்நாளின் இரவன்று உறங்காமல் விழித்திருப்பதற் கான பலன்கள் எடுத்துரைக்கப்பட்டு, மக்களை விழித்திருக்கச் செய்வதற்காகப் பல உபாயங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

யோக மரபில் சிவபெருமான் ஒரு கடவுளாக வழிபடப்படாமல், ஆதி குரு - முதலாவது குருவாகக் கருதப்படுகிறார். ஆன்மிகப் பாதையில் இருக்கும் ஒரு மனிதர் அந்த நாளில்தான் கயிலாய மலையுடன் ஒன்றிணைகிறார். அவர் ஒரு மலையைப்போல முழுமையான நிச்சலனமாகிறார். பல்லாண்டு ஆத்ம சாதனைகளுக்குப் பின்னர், ஒரு நாள் அவர் முழு நிச்சலனத்தில் ஆழ்கிறார். அந்த நாள்தான் மகா சிவராத்திரி நாள். அந்த நாளில் அவருள் இருக்கும் அனைத்து அசைவுகளும் நின்று போகின்றன. எனவே அந்த நாளினை அவர்கள் நிச்சலனத் திற்குரிய நாளாகக் கருதுகிறார்கள்.

மதங்கள் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையைச் சாராமல், அறிவியல் ரீதியாகவே அனைவருக்கும் ஆன்மிக வளர்ச்சிக்குத் துணைபுரிவதால், மகா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் ஈஷா யோக மையத்தில் இரவு முழுவதும் ஒரு இறைவிழாவாக நிகழ்கிறது.




                 மகாசிவராத்திரி விஞ்ஞான பூர்வமாக நடக்கும் 
இயற்கையான நிகழ்வு. சூரிய ஒளிவட்டம் தென் பகுதியிலிருந்து வட பகுதிக்கு செல்லும் தினம்.
பூமியின் மேல் மண்டலத்தில் ஒரு வகை ஈர்ப்பு ஏற்படும். அன்றைய தினத்தில் முதுகு தண்டை நேராக வைத்து உட்காரும் போது சக்தி மேல் நோக்கி எழும். எனவேதான் அன்றைய தினத்தில் தூங்காமல் சக்தியை உணருங்கள். வேறு ஏதாவது இடத்தில் வேறு செயல்களை செய்யும் போது முதுது தண்டில் ஆன்மிக சக்தி எழும்பாது. மகா சிவராத்திரி தினத்தில் முதுகு தண்டை நேராக வைத்திருக்கும் நிலையில் உட்கார்ந்திருந்தால் ஆன்மிகம் உச்சமாகும்.``

   எனவே நாம் அர்ச்சனையெல்லாம் செய்யாவிட்டாலும் இறைவனை தியானித்து ``ஓம் நமச்சிவாயா``எனும் மந்திரத்தை உச்சரித்து முத்தி 
பெருவோம்.
திருச்சிறம்பலம்





என்னால் முடிந்த அர்ச்சனை