இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 28 பிப்ரவரி, 2011

நாம போடாத பட்ஜெட்டா.......!!

இந்தியா !


சுதந்திரம் வாங்கியதிலிருந்து வளரும் வல்லரசு
வருடம் தோறும் நடைபெறும் பட்ஜெட் திருவிழா(இப்ப டி.வி சேனலுக்கு)
எதிரணியின் வழக்கமான ``ஏழைகளுக்கு உதவாத பட்ஜெட்`` என்கிற அறிக்கை
ஆளும் கட்சிகளின் ``அனைவருக்கும் உகந்த பட்ஜெட்`` (யாருக்குனு அவனுகளுக்குதான் வெளிச்சம்)
தன் டி.வி சேனல் ரேட்டிங்கை ஏத்த .அடிதடியான வாக்கு வாதங்கள்
இத மலங்க மலங்க பார்கிற நடுதர கும்பல்
கொள்ளையடித்த (சேமித்த) கருப்புபணத்தை இந்திய கொண்டுவர சாத்தியம் இருந்தும் 
இக்காரியத்தை செய்யாத அரசியல்வாதிகள்
இவர்களுக்கு இணையாக எந்த மிருகங்களையும் சேர்த்தி பேசாதீர்கள் தயவு 
செய்து !
கலாமின் கெடுவுக்குள்ளாவது(வருடம் 2020) உன்மையான வரவு செலவை சம்ர்பிப்பார்களா?
அதுவரை காத்திருப்போம்.


நமது பட்ஜெட் என்னனா !


சுவிஸ் வங்கிக்கு 60%
அரசியல்வாதி செலவுக்கு 10%
பண முதலைகளுக்கு 10%
அரசியல் அடிவருடிகளுக்கு 10%
போனா போவுது மக்களுக்கு 10%
ஒரு 50% வெளிநாட்டில் கடன வாங்கி தேர்தல் செலவுகள் ,மற்றும் இதர பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு  


எப்பூடி இந்திய அரசியல்வாதியின் பட்ஜெட்.





ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

காதலி... !!

படித்ததில் பிடித்தது,,,,,,,,,,,,,!!


என்னுடையது என்று நினைத்துதான்
இதுவரையில் வளர்த்து வந்தேன்..


ஆனால்
முதல்முறை உன்னைப் பார்த்ததுமே
பழக்கப்பட்டவர் பின்னால் ஓடும் நாய்க்குட்டி மாதிரி
உன் பின்னால் ஓடுகிறதே
இந்த மனசு!




சற்றுமுன் நீ நடந்துபோன
தடயம் எதுவுமின்றி
அமைதியாய்க் கிடக்கிறது வீதி..


எனினும்
அதிகவேக இரயிலொன்று
கடந்துபோன தண்டவாளம் போல
இன்னும் அதிர்கிறது
என் இதயம்.




சூரியன் வந்த பிறகுதான்
நீ வருகிறாய் என்றாலும்
நீ வரும்போதுதான்
விழிக்கிறது இந்த வீதி.




இந்த மலையைக் குடைந்து
இரயில் பாதை அமைத்தவனுக்காவது தெரியுமா
உன் கல்மனசுக்குள் 
நுழைவது எப்படி என்று.!




நான் நல்லவன் என்று
நினைத்துக் கொண்டிருந்தேன்.
அந்த நினைப்பில்
மண் அள்ளிப் போட்டுவிடும் போலிருக்கிறது
உன் மீதான காதல்.


உன் வீட்டுமுன் காய்ந்து கொண்டிருக்கும்
உனது ஆடையைத் திருடி வரச்சொல்லி
நச்சரிக்கிறதே மனசு.


எனது அறையின் தினசரி காலண்டர்கூட
கேலி பேசுகிறது என்னை.
முதல் நாள் உன்னைப் பார்த்திருந்தால்
அந்த தேதியை மெதுவாக கிழிக்கின்றேனாம்.
பார்க்கவில்லையெனில்
பிய்த்துக் கசக்கி எறிகிறேனாம்.!




உன்னைக் கேலி பேசுபவனையெல்லாம்
முறைத்து பார்க்கிறாய்
உன்னை நேசிக்கிற என்னை மட்டும்
சாதாரணமாகக்கூட பார்க்க மறுக்கிறாயே.




எப்போதும் 
சுரிதாரிலேயே பார்த்த உன்னை
முதல்முறை சேலையில் பார்த்தபோது....
அய்யோ அந்த சேலை
உன்னைக் கட்டிக்கொண்டிருக்கிறதே.




நீயோ
சூரிய வெளிச்சம் முகத்தில் படாமலிருக்க
புத்தகத்தால் உன் முகத்தை
மறைத்துக் கொள்கிறாய்.
சூரியனோ
உன்னை பார்க்கமுடியாத கோபத்தில்
எல்லோரையும் சுட்டெரித்துக்கொண்டிருக்கிறது.




பயணம் முடிந்ததும்
நீ வீசிவிட்டுப்போன பயணச்சீட்டு
வீதியில் கிடந்து புலம்பிக் கொண்டிருக்கிறது
பயணம் முடிந்துவிட்டதை நினைத்து.


எல்லாப் பெண்களும்
உதட்டை அழகாய்க் காட்டுவதற்காக
உதட்டு சாயம் பூசிக்கொள்கிறார்கள்.
நீ மட்டும்தான்
உதட்டின் அழகை மறைத்துக்கொள்வதற்காக
உதட்டு சாயம் பூசிக்கொள்கிறாய்.




துடிப்பதைவிட
உன்னை நினைப்பதற்கே
நேரம் சரியா இருக்கிறது
என் இதயத்திற்க்கு


புவியின் ஈர்ப்பு விசையில்
எப்போதாவது தவறி விழுந்திருக்கிறேன்.
உனது விழியின் ஈர்ப்பு விசையில்
எப்போதும் தவறாமல் விழுந்துகொண்டிருக்கிறேன்..


முதல் முறை
உனது வீட்டிற்கு வந்தபோது
நான் பார்த்து ஆச்சர்யப்பட்டது
உனது அறையிலிருக்கும்
ஆளுயரக் கண்ணாடியைத்தான்
ஏன்?
இத்தனை நாளும்
உன் அழகையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தும்
விரிசல் ஏதும் விழாமல்
அப்படியே இருக்கிறதே!!


உன்னை ஏன் 
இப்படிக் காதலித்துத் தொலைகிறேன்
அடிக்கிற அம்மாவின் 
கால்களையே கட்டிக்கொண்டு
அழுகிற குழந்தை மாதிரி


தொலைபேசியில் எல்லாம்
நீ என்க்கு முத்தம் தராதே
அது உன் முத்தத்தை எடுத்துக்கொண்டு 
வெறும் சத்தத்தை மட்டுமே
என்க்கு தருகிறது


ஏற்கனவே பூத்த பூதான்
ஆனாலும் 
நீ சூடும் போது
மறுபடியும் பூக்கிறதே!!




எல்லா கவிதைகளுமே
உன்னைப் பற்றியவைத்தாம் எனினும்
ஒரு கவிதைகூட
உன்னை மாதிரி இல்லையே ...!!


அன்மையில் என் அன்புதோழமை 
தந்த கவிதை தொகுப்பு..





                                              
 நன்றி



அன்புடன்


விஜய்

















































ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

மலேசியா வாசுதேவன் மரணம்!!.....

 பிரபல பின்னணிப் பாடகரும், நடிகருமான மலேசியா வாசுதேவன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இன்று இயற்கை எய்தியுள்ளார்.
 பிரபல பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவன். அவர் தனது இனிய குரலாலும், திறமையான நடிப்பாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.
அவர் 8,000க்கும் அதிகமான தமிழ்த் திரைப்பாடல்களைப் பாடியுள்ளார்.85 க்க்ம் மேற்பட்ட தமிழ் திரையில் நடித்துள்ளார்,4000 பாடல்கள் பிற மொழியில் பாடியுள்ளார்.
இவரைபற்றி சிறப்பான இடுகை இட எண்ணினேன் , ஆனால் இப்ப முடியவில்லை
இவர் முதலில் பாடியது MSVயின்  டெல்லி டூ மெட்ராஸ் படத்திற்கு
பின் ராஜாவின் இசையில் பதினாறு வயதினிலே ``ஆட்டுகுட்டி முட்டையிட்டு`` பாடல் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
அனைத்து படங்களிலும் சிறப்பாக நடித்த இவர் ஆத்மா சாந்தியடையட்டும்
இவருடைய மகன் யுகேந்திரன்  சில படங்களில் நடித்துள்ளார்,
மகள் பிரசாந்தினியும் பிரபல் பாடகியாக உருவாகியுள்ளார்.

 

சனி, 19 பிப்ரவரி, 2011

ஏய் சிட்டு !!,,,,,,,,, உளவாளி!!!,,,,,,,,,,,,,,,

Unsuspecting: The tiny hummingbird spy drone has a wingspan of 
just 16 centimetres and propels itself like a real bird - just by 
flapping its little wings  

அட! இது என்ன தேன் சிட்டு குருவி!!
இல்லையா?,,,
இல்லன்னா பொம்மை பிளைட்டா!!...
அட இல்லைங்கோ
வெறும் 16 செ.மீ க்கு 4 மில்லியன் அமெரிக்கடாலரில் செய்யப்பட்ட ஒரு தேன்சிட்டு பொம்மை!
அப்படி என்ன சிறப்புனா பாக்கட் அளவுல்ல இது அமெரிக்க இராணுவத்துக்கு 
அதனுடய ஆஸ்தான ஒப்பந்ததரரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
16 செ.மீ அள்வுள்ள இது AA பேட்டரியின் கணத்தை விட குறைவு.
ஐந்து வருட உழைப்பில் 4 மில்லியன் டாலர் செலவு செய்த இது மணிக்கு 11 
மைல் செல்லும்.
இதனுடைய ப்ரொபைலர் இறக்கைபோல் உள்ளது,இதனுடைய சிறிய இறகை அசைத்து அசைத்து பறந்து சிறிய பொந்திலும் பவர் லைன் இடையிலும் செல்லக்கூடியது.
மணிக்கு 5 மைல் வேககாற்றையும் கிழித்துக் கொண்டு செல்லகூடியது
பார்வைக்கு அசலாக இருப்பதால் இதில் கேமரா வைத்து போரில் பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது


Test: The $4million project has taken five years. The latest 
demonstration saw the drone fly into and out of a building at 11mph, and
 withstand 5mph winds for the eight minute flight
அன்புடன்
தவறுகளை திருத்திகொள்ள வாய்பளியுங்கள்

வெற்றி!! வெற்றி!!!

இந்திய அணிக்கு மணமார்ந்த வாழ்த்துக்கள்!

வளர்ந்துவரும் பங்ளாதேஷ் அணியைய் தோற்கடித்து 2011 உலககிண்ணம்
பந்தயத்தில் முதலில் வெற்றி பெற்ற  இந்திய அணி எல்லா தொடரிலும் வெற்ற
காண வாழ்த்துவோம்




செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

உங்கள் வாக்கு உங்கள் கையில்.....!!!!!









நீங்கள் பணி(வேலை) காரணமாக வெளிநாட்டில் -வெளி ஊரில் வேலை செய்யலாம். உங்களுக்கான ஒட்டு உரிமை உங்கள் சொந்த ஊரில் இருக்கலாம்.நமக்கு ஒட்டு உள்ளதா - வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள எண் படி நமது பெயர் - முகவரி விவரம் சரியாக உள்ளதா என எளிதில சோதித்துக்கொள்ளலாம்.துபாயில் வேலை செய்யும் ஒருவருக்கு சைதாப்பேட்டையில் ஒட்டு இருக்கும். மகன்கள் இருக்கின்றார்கள். அவர்கள் அவ்வளவு பொறுப்பாக சென்று நமது பெயர் விவரங்களை சரிபார்ப்பர்காள என்றால் இல்லை. நமது பெயர்பார்க்கும் வேலையைஅரசு வெளியிட்டுள்ள தேர்தல் அட்டவணை விவரத்தில் உள்ள விவரங்கள் சரிபார்க்க நாம் சைதாப்பேட்டை வரவேண்டியதில்லை. துபாயில் இருந்தே விவரங்களை சரிபார்க்கலாம். இந்த தளம் செல்ல நீங்கள்இங்கு கிளிக செய்யவும்.

http://www.elections.tn.gov.in/eroll/

வருகின்ற விண்டோவில் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்யுங்கள். அடுத்துள்ள உங்கள சட்டமன்ற தொகுதியை தேர்வு செய்யுங்கள்.(இப்போது உங்களுடைய சட்ட மன்ற தொகுதியை மாற்றி அமைத்துள்ளார்கள்).இதில் முதலில் உள்ள வாக்காளர் அடையாள அட்டை எண் மூலமாக தேடலாம். அடுத்துள்ள வாக்காளர் பெயர் மூலம் தேட கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் வாக்காளர்பெயர் தட்டச்சு செய்யவும். நீங்கள் வாக்காளர் பெயர் தட்டச்சு செய்வதற்குவசதியாக உங்களுக்கு தமிழ் கீ-போர்ட் இணைத்துள்ளார்கள். தேவையான எழுத்தை கிளிக் செய்ய அதன் மெய்யெழுத்து அனைத்தும் வரும். தேவையானதை கிளிக் செய்து பெயரை எளிதில்அமைக்கலாம்.
அடுத்துள்ள வாக்குசாவடியின் பெயர் மூலமாகவோ - தெருவின் பெயர் மூலமாகவோ எளிதில் தேடலாம்.

தேர்தல் வருவதற்கு முன் உங்கள் வாக்கு உரிமையை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.ஒட்டுப்போடுங்கள். ஜனநாயக கடமையை நிலைநாட்டுங்கள்.

அனைவருக்கும் பயன்படும் என்பதால் ;;;

நானும் பகிர்ந்துள்ளேன்

புதன், 2 பிப்ரவரி, 2011

அமைதி....!!!

`அமைதி`   செவியில் கேட்பதற்க்கு இனிமையான சொல்,!அற்புதமான சொல்,!!
பல சாம்ராஜ்ய யுத்தங்களில் பல இன்னுயிர்கலை காத்த சொல்


அமைதியாயிருக்கும் குணம் கொண்டவர்கள் மேன்மை பெற்றவர்கள், இவர்கள் இயற்கையாக மனோ சக்தி அதிகம் கொண்டவர்கள். வீட்டிலோ, வேலை செய்யுமிடத்திலோ..பிரச்சனை என்றால் அமைதியாக இருந்தாலே போதும் அதன் பலனை நீங்கள் அறிவீர்!


அமைதி என்பது உலக அளவில் போர் இல்லாத நிலையை குறிக்கிறது.
இது வன்முறை இல்லாத வாழ்க்கையும், தனி மனிதனின் மதிப்பு.மனித தர்மம்,நல்ல எண்ணங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது.
   ``அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணி கடக்கக் கருதவும் வேண்டாம்``
என்பது அவ்வையின் வாக்கு

அமைதியாக இருப்பவர்களை அறிவில்லார் என் எண்ணி அவர்களை வென்று 
விடலாம் என்று நினைத்து விடவேண்டாம் என்பது இதன் பொருள்.




குழந்தையின் அமைதியும் நாம் ரசிக்க கூடிய ஒன்று,எந்த கள்ளம் கபடம் 
இல்லா அமைதியாக தூங்கும் மழலையின் அமைதியில் எத்தனை  ஆயிரம் உன்மைகள் ! 
இதனால் தான் என்னற்ற காதலர்களை பெற்றோர்கள் எதிர்த்தலும் பின் ஒரு குழந்தைக்கு பின் சமாதானமகி குடும்பத்தில் அமைதி எற்படுகிறது,!அது போல்தான்  
பிரிய நேரும் தம்பதிகளையும் அவர்கள் வாழ்வில் அமைதியை கொண்டுவந்து சேர்த்து வைக்கிறது குழந்தை.இதெல்லாம் இந்திய 
காலாச்சாரத்திற்கு பொருந்தும்.முதியவர்களுக்கு தன் பேர குழந்தைகள் மூலம் 
இறுதிகாலத்தில் வாழ்வில் சந்தோஷங்களையும் அமைதியும் பெறுவோர் அதிகம்,இவை கிடைக்காதபட்சத்தில் தான் கடவுளை நாடுகிறான் அமைதிக்காக! ஆகவே ஒரு குழந்தை தன்னை சார்ந்த அனைத்து உறவுகளுக்களுக்கும் அமைதியும் சந்தோஷத்தையும் அளிக்கிறது.




காந்தி என்கிற ஒரு மனிதன் அமைதியை கையாண்டதனால் அகிம்சை எனும் சொல்லுக்கு அர்தம் தந்தான்! அவர் அமைதியை பின் பற்றியதால் 


அவர் வழியில் ஆயிரமாயிரம் மக்கள் பின்தொடர்ந்தனர்.மிகபெரிய ஒரு தேசத்திற்கு சுதந்திரம் பெறவும் ,அவர் மாத்மா எனும் உயர் 
நிலையைய்யும் அடையமுடிந்தது.`அமைதி `ஒரு 
மனிதனை எவ்வளவு உயர்வுள்ளவனாக உயர்த்தும் என்பதற்க்கு உலகம் அறிந்த சான்று காந்தி !!

கவிஞரின் ஆண்டவன் கட்டளையில் வரும் பாடல்

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்!
அளவிலாத வெள்ளம் வந்தால் ஆடும்!!





உலகத்தில் அமைதி நிலவி அனைவரது வாழ்விலும் அமைதி ஏற்பட அனைவரிடமும் நட்புடன் வாழமுற்படுவோம்!







ஏதேனும் கருத்து இருந்தால் கூறவும்